வாவ்.. அசாம் மொழியில் வெளியாகி பட்டையை கிளப்பிய தெறி.. வாயை பிளக்க வைத்த வசூல்.. பாராட்டிய சிஎம்!

திஸ்பூர்: அசாம் மொழியில் ரத்னாகர் என்ற பெயரில் வெளியான தெறி திரைப்படம் பல சாதனைகளை படைத்து பட்டையை கிளப்பியிருக்கிறது.

தெறி படம் தமிழில் விஜய் -அட்லீ இயக்கத்தில் உருவானது. கடந்த 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் ஏமி ஜாக்ஸன் நடித்திருப்பார்கள்.

விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த இப்படம் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. விஜயும் அட்லீயும் மீண்டும் இணைய இப்படம்தான் காரணமாக அமைந்தது.

படத்தின் கதை

படத்தின் கதை

இந்தப்படத்திற்கு பிறகுதான் விஜய் அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்திலும் தீபாவளிக்கு ரிலீஸான பிகில் படத்திலும் நடித்திருந்தார். சின்சியர் போலீஸ் அதிகாரியான விஜய், அரசியல்வாதியின் கோபத்திற்கு ஆளாகி குடும்பத்தை இழந்து மகளை வேறு மாநிலத்தில் பாதுகாப்பாக யாருக்கும் தெரியாமல் வளர்ப்பார்.

அசாமியில் ரத்னாகர்

அசாமியில் ரத்னாகர்

இந்தப் படம் தமிழில் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் இந்தப்படம் அசாம் மொழியான அசாமியில் ரத்னாகர் என்ற பெயரில் கடந்த மாதம் 11ஆம் தேதி ரிலீஸானது.

லீடிங் ரோல்

லீடிங் ரோல்

இந்த படத்தில் அம்மாநில சூப்பர் ஸ்டார் ஜதின் போரா லீடிங் ரோலில் நடித்திருந்தார். தெறி படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக லீடிங் ரோலில் நடித்திருப்பார். ஆனால் ரத்னாகரில் போரா கேங்ஸ்டராக நடித்திருக்கிறார்.

அனைத்து தியேட்டர்களிலும்

அனைத்து தியேட்டர்களிலும்

இந்தப் படத்தை தயாரிப்பாளர் நவநிதாவுடன் சேர்ந்து நடிகர் போராவும் தயாரித்து இருந்தார். ரத்னாகர் படம் அசாமில் 59 தியேட்டர்களில் ரிலீசானது. இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தியேட்டர்களிலும் ரிலீஸானது.

9 கோடிக்கு மேல் வசூல்

9 கோடிக்கு மேல் வசூல்

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நவநிதா, ரத்னாகர் படம் அசாம் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இது வரை இப்படம் ரூ. 9 கோடியே 23 லட்சம் வசூல் செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

900 கோடிக்கு சமம்

900 கோடிக்கு சமம்

அசாமில் ஒரு படம் 9 கோடி ரூபாய் வசூல் பார்ப்பது என்பது பாலிவுட்டில் ஒரு இந்திப்படம் 900 கோடி ரூபாயை வசூல் செய்வதற்கு சமம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். இதேபோல் செப்டம்பர் மாதம் ரிலீஸான கன்ஜன்ஜங்கா படம் 7 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது.

முதல் முறை..

முதல் முறை..

அந்தப்படம் படைத்த சாதனையை ஒரே மாதத்தில் ரத்னாகர் முறியடித்திருக்கிறது. அசாம் மாநில திரைப்பட வரலாற்றிலேயே ஒரு படம் 10 கோடி ரூபாய் வசூலை பார்ப்பது இதுதான் முதல் முறையாம்.

சிஎம் பாராட்டு

சிஎம் பாராட்டு

அசாம் திரைத்துறைக்கு இப்படி ஒரு பெருமையை சேர்த்த ரத்னாகர் படக்குழுவை அம்மாநில முதல்வர் பாராட்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அசாம் மொழியில் வெளியான தெறி படம் இப்படி ஒரு சாதனையை படைத்திருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Read more about: thri movie தெறி படம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X