100 மில்லியன் பார்வைகள்... 5 வருடங்களை கடந்தும் சாதித்த 'தெறி' படத்தின் பாடல்
சென்னை : நடிகர்கள் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் முக்கியமாக குழந்தை நட்சத்திரம் நைனிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016ல் வெளிவந்த படம் தெறி.
விஜய் மற்றும் நைனிகாவை அதிகமாக போகஸ் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூல்ரீதியாகவும் சிறப்பை பெற்றது.
இந்நிலையில் 5 ஆண்டுகளை கடந்து இந்த படத்தின் பாடல் 100 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

விஜய் -அட்லி கூட்டணி
கடந்த 2016ல் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லியின் கூட்டணியில் வெளிவந்த படம் தெறி. அழகான அப்பா -மகள் உறவை சிறப்பாக வெளிப்படுத்திய இந்த படத்தில் ஆக்ஷன், காமெடி என்று அனைத்திலும் பட்டையை கிளப்பியிருப்பார் விஜய்.

துருதுரு நடிப்பில் கவர்ந்த நைனிகா
சிறப்பான போலீஸ் ஆபிசராக வந்து அனைவரையும் கவர்ந்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக இந்த படத்தின்மூலம் அறிமுகம் ஆன நடிகை மீனாவின் குழந்தை நைனிகாவும் தன்னுடைய மழலை நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருந்தார். துருதுரு நடிப்பில் நடிகர் விஜய்க்கே டப் கொடுத்திருந்தார்.

சிறப்பான வரவேற்பு
இவர்கள் இருவரின் நடிப்பில் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஈனா மீனா டீக்காவும் அந்த படத்தில் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இருவரும் அந்த பாடலில் சிறப்பான கெட்டப்புகளில் வந்து ஆட்டம் போட்டிருப்பார்கள். தந்தை -மகள் உறவை சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருப்பார் அந்த பாடலில் டைரக்டர் அட்லி.

வரவேற்பு குறையாத பாடல்
இந்நிலையில் அந்த பாடல் தற்போது யூடியூப் பக்கத்தில் 100 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது. 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பாடலுக்கான வரவேற்பு சற்றும் குறையவில்லை என்பதையே இந்த பார்வைகள் காட்டுகின்றன. விஜய் எது செய்தாலும் அழகுதான். அதுவும் குட்டி தேவதையும் சேர்ந்து போட்ட ஆட்டத்திற்கு இவ்வளவு பார்வைகள் கிடைத்துள்ளது சிறப்பானது.

ஜிவி பிரகாஷ் பாராட்டு
இந்நிலையில் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெறிவித்து வருகின்றனர். இதேபோல படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷூம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான போஸ்டரை வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











