»   »  "தெறி.. சொறி"... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா!

"தெறி.. சொறி"... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைவா.. நீ பெயரை மட்டும் வை.. மத்தத நாங்க பாத்துக்கிறோம்.. இதுதான் சமூக வலைதளங்களில் கிண்டல், நக்கல், நையாண்டி செய்வோரின் தாரக மந்திரம். படத்துக்குப் பெயர் வைத்த அடுத்த விநாடி முதல் அதைப் போட்டுத் தாளிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது இதில். வாகாக சிக்கும் யாராக இருந்தாலும் விடுவதில்லை இவர்கள்.. போட்டு வறுத்தெடுத்து விடுகிறார்கள்.


இப்படித்தான் புலி படத்தின் பெயரைப் போட்டு காலி செய்தார்கள். போதாதற்கு டி.ராஜேந்தர் வேறு அந்தப் புலி இந்தப் புலி எந்தப் புலி என்று போட்டுத் தாக்க, அதையே வைத்து அட்டகாசமான முறையில் அட்டாக் செய்தனர் விஜய் எதிர்ப்பாளர்கள்.


புது தலைப்பு கிடைச்சிருக்கு மச்சி

புது தலைப்பு கிடைச்சிருக்கு மச்சி

இப்போது இதுபோன்ற நக்கல் நையாண்டிக்காரர்களுக்கு வசதியாக ஒரு புதிய பெயர் கிடைத்திருக்கிறது. அதுதான் விஜய் நடித்து வரும் புதிய படமான தெறி படத்தின் தலைப்பு.


தெறி

தெறி

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் தெறி. இதற்கு இதுவரை பெயர் வைக்கப்படாமல் இருந்தது. நேற்று வைத்து விட்டனர். எனவே கிண்டல்காரர்களும் நேற்றே "கடை"யைத் திறந்து "சுண்டல்" விற்க ஆரம்பித்து விட்டனர்.


தெறி.. சொறி

தெறி.. சொறி

விஜய் படத்தின் பெயரை தெறி என்பதற்குப் பதில் சொறி என்று மாற்றி ஒரு நக்கல் படம் உலா வருகிறது. கதை வசனம் இயக்கம் கொக்கி குமாரு என்றும் போட்டு கலாய்த்துள்ளனர்.


அடடா..

அடடா..

மற்றொரு போட்டோஷாப் படத்தில் விஜய் படத்தை எடுத்து விட்டு வடிவேலு படத்தைப் போட்டு லந்து பண்ணியுள்ளனர் குசும்புக்காரர்கள்.


இன்னும் எப்படியெல்லாம் தெறிக்க விடப் போறாங்களோ!English summary
Actor Vijay's opponents are started teasing the title of his new flick, Theri in FB and other social media sites.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil