twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாருமேல சூப்பர்ஸ்டார்.. நரம்புக்குள்ள சூப்பர்ஸ்டார்.. சிம்பு குரலில் தெறிக்குது ரஜினிகாந்த் ஆந்தம்!

    |

    சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, சூப்பர்ஸ்டார் ஆந்தம் ரிலீசாகி இருக்கிறது.

    சுழல்பந்து வீரராக கலக்கி வந்த ஹர்பஜன் சிங், தமிழில் தற்போது டிக்கிலோனா, பிரண்ட்ஷிப் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

    அதிலும், அவர் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது ரிலீசாகி இருக்கிறது.

    தற்கொலைக்கு முன் தனது பெயரை கூகுள் செய்து பார்த்த நடிகர் சுஷாந்த் சிங்.. தடயவியல் அறிக்கை தகவல்!தற்கொலைக்கு முன் தனது பெயரை கூகுள் செய்து பார்த்த நடிகர் சுஷாந்த் சிங்.. தடயவியல் அறிக்கை தகவல்!

    அறிவித்தபடியே

    அறிவித்தபடியே

    சிம்பு குரலில் உருவாகி உள்ள இந்த சூப்பர்ஸ்டார் ஆந்தம் தற்போது ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அறிவித்தபடியே நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த பாடலை தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹர்பஜன் சிங்குக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், சூப்பர்ஸ்டார் ஆந்தம், தமிழ் மற்றும் இந்தி மொழியில் உருவாகி இருக்கிறது.

    சிம்பு குரலில் தெறிக்குது

    சிம்பு குரலில் தெறிக்குது

    மாருமேல சூப்பர்ஸ்டார்.. நரம்புக்குள்ள சூப்பர்ஸ்டார் என சிம்பு குரலில் தொடங்கும் இந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆல்பம் இணையத்தையே தெறிக்க விட்டு வருகிறது. ஒவ்வொரு பாடலும், ரஜினியின் ஸ்டைல் பஞ்சுகளை போல இருப்பதால், ரசிகர்களுக்கு கேட்ட முதல் தடவையே பிடிக்கும் வண்ணம் இருக்கிறது இந்த ஆந்தம்.

    லாஸ்லியா ஆர்மி

    லாஸ்லியா ஆர்மி

    ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் இந்த பாடலை டிரெண்ட் செய்கின்றார்கள் என்றால், பிக்பாஸ் லாஸ்லியாவின் அறிமுக படம் என்பதால், லாஸ்லியா ஆர்மியினர் சமூக வலைதளத்தில் களமிறங்கி, ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்தும், இந்த பாடலை டிரெண்ட் செய்தும் வருகின்றனர்.

    ஸ்டைல் மன்னன்

    ஸ்டைல் மன்னன்

    சிம்பு குரலில் பட்டையை கிளப்பும் இந்த சூப்பர்ஸ்டார் ஆந்தம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள இந்த பாடலில் இடம் பெற்றுள்ள ஸ்டைல் மன்னன் சூப்பர்ஸ்டார் என்ற மாஸான வரிகளின் ஸ்க்ரீன் ஷாட்களை எடுத்து ரஜினிஸம் பொங்க டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    கைய மடிச்சுவிட்டு

    கைய மடிச்சுவிட்டு

    கூலர்ஸ் அணிவதாக இருக்கட்டும், சிகரெட் பிடிப்பதாக இருக்கட்டும், ஸ்டைலின் அஸ்திவாரத்தை இளைஞர்கள் நெஞ்சில் விதைத்ததே சூப்பர்ஸ்டார் ரஜினி தான் என்ற வரிகளும், கைய மடிச்சுவிட்டு, முடியை கோதி விட்டு என வரும் லிரிக்ஸும் கூஸ்பம்ப்ஸ் கொடுக்க தவறவில்லை. ரஜினி ரசிகர்கள் ஆட்டம் போட இன்னுமொரு பக்காவான பாட்டு கிடைத்திருக்கிறது.

    ஓடவிடும் மாஸுக்கு தலைவா

    ஓடவிடும் மாஸுக்கு தலைவா

    முறுக்கி விட்ட மீசையுடன் இந்த பாடலை பாடியிருக்கும் சிம்புவின் போட்டோக்களுடன், ஓடவிடும் மாஸுக்கு தலைவா, கலங்கடிக்கும் கிளாசுக்கு தலைவா, ஸ்டைலுக்கு அஸ்திவாரம் போட்டது தலைவன், பாசத் தலைவன் என வரும் வரிகளும் தீப்பொறியாய் தெறிக்கிறது. பாடலின் விஷுவல்ஸ் எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.

    80ஸ் பில்லா, 90ஸ் பாட்ஷா,

    80ஸ் பில்லா, 90ஸ் பாட்ஷா,

    80ஸ் பில்லா, 90ஸ் பாட்ஷா, 2கே காலா என சிம்பு கம்பீர குரலில் கர்ஜித்து பாடும் இந்த சூப்பர்ஸ்டார் ஆந்தம் நிச்சயமாக ரஜினியின் திரை வாழ்க்கைக்கு ஒரு ட்ரிப்யூட் பாடலாகவே அமைந்திருக்கிறது. லிரிக் வீடியோவின் ஒவ்வொரு ஸ்க்ரீன் ஷாட்டையும் ரசிகர்கள் ஷேர் செய்வார்கள் என்ற நோக்கத்துடனே படக்குழு இந்த அட்டகாசமான பாடலை உருவாக்கி இருப்பது தெளிவாக தெரிகிறது.

    English summary
    Just now Raghava Lawrence happily released his star Rajinikanth’s Superstar Anthem in the movie Friendship sung by STR’s powerful voice.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X