Don't Miss!
- News
செல்ஃபி புள்ளை! மலை பூங்காவின் "கேமராவை" தூக்கிய கரடி.. ஒன்னு ரெண்டு இல்ல 400 போட்டோ எடுத்து அசத்தல்
- Finance
மாதம் 8000 சம்பளம் வாங்கியவர், தினமும் 6 கோடி சம்பாதிக்கிறார்.. யார் இந்த நிதின்..!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஒவ்வொரு பாட்டுலயும் ஆழமா செயல்படறாரு... சிஎஸ் அமுதன் பாராட்டு யாருக்கு?
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கிவரும் படம் ரத்தம்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் படத்தில் தற்போது தெருக்குரல் அறிவு இணைந்துள்ளார்.
சில்வர் கோட் மாட்டிக் கொண்டு.. பிக் பாஸ் அல்டிமேட் மேடையை அதிர விட தயாரான வனிதா விஜயகுமார்!

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் வித்தியாசமான தலைப்புகளுக்காகவே ரசிகர்களிடையே சிறப்பான கவனத்தை பெற்று வருகின்றன. கொலைகாரன், காளி, அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் என அடுத்தடுத்து படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன.

கோடியில் ஒருவன் படம்
இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படமும் இவருக்கு ரசிகர்களிடையே சிறப்பான கவனத்தை பெற்றுத் தந்தது. இந்தப் படம் முதலில் திரையரங்குகளில் ரிலீசாகி பின்பு அமேசான் பிரைமிலும் ரிலீசானது.

சிஎஸ் அமுதன் இயக்கம்
அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களை இயக்கிய சிஎஸ் அமுதன் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

வித்தியாசமான கெட்டப்
இந்த லுக்கில் வித்தியாசமான கெட்டப்பில் அவர் காணப்படுகிறார். மேலும் இந்த லுக் வெளியானவுடன் படத்தின் இயக்குநர் சிஎஸ் அமுதனிடம் தான் படத்தில் நல்லவனா கெட்டவனா என்று கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பினார். சிஎஸ் அமுதனின் முந்தைய படங்கள் காமெடி படங்களாக அமைந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியின் ரோல் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
Recommended Video

சிஎஸ் அமுதன் பாராட்டு
இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் பாடகர் தெருக்குரல் அறிவு இணைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் சிஎஸ் அமுதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார்.

தெருக்குரல் அறிவு பாட்டு
ரத்தம் படத்தில் அவர் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் ஒவ்வொரு பாடலிலும் அறிவார்ந்த ஆழம், அனுபவம் மற்றும் கலைத்திறனை அவர் கொண்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தங்களது ரத்தம் படத்தில் அவர் இணைந்துள்ளது தங்களது அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வித்தியாசமான தலைப்பு
நடிகர் விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளது. இந்தப் படத்தில் சிஎஸ் அமுதன் அவரை இயக்குவது மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் படத்தில் தெருக்குரல் அறிவு பாடலை பாடியுள்ளதும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.