Ilayaraaja: இளையராஜாவை உச்சி குளிரவைத்த தெருக்குரல் அறிவு டீம்.. சிரிப்பு மழையில் இசைஞானி.. வீடியோ!

சென்னை: தமிழ் திரையுலகில் இளையாராஜாவைப்போல் ஒரு கலைஞர், அதுவும் ஒரு இசைக் கலைஞர் மீண்டும் அமைவது அரிதினும் அரிதான விஷயம்தான். இவரது இசைக்கு ஒட்டுமொத்த தமிழர்களுமே ரசிகர்கள்தான். இதில் இளையராஜா பாடல்களை மட்டுமே கேட்போம் என இருக்கும் தீவிரமான பக்தர்களும் கூட உள்ளார்கள் எனலாம். இதுமட்டும் இல்லாமல், இளையராஜாவால் இன்றைய இசையமைப்பாளர்களுடன் போட்டி போட முடியாது என விமர்சனங்களை பலர் முன்வைக்கும்போது, அட்டகாசமாக இசை அமைத்து, மொத்த தமிழ்நாட்டினையும் தனது பாடலை முனுக வைத்து வருகின்றார். ஆனால் அதேநேரத்தில் இவரது கோபம் இவர் மீதான மொத்த மரியாதையும் சிதைத்துவிடும் அளவிற்கு இவரது நடவடிக்கைகள் பல இடங்களில் இருந்துள்ளது.

மேலும் இவரது பேச்சு பல நேரங்களில் பல முன்னணி நடிகர்களை, பாடகர்களை, தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை மற்றும் ரசிகர்களைக் காயப்படுத்தியுள்ளது. அப்பேர்ப்பட்ட இளையராஜாவை ஒருவர் உச்சி குளிர வைத்துள்ளார் என்றால் சும்மாவா? அதுவும் இளையராஜாவை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார் என்றால் அது சாதாரண விஷயமா? அப்படியான சம்வத்தைச் செய்து, வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் தனியிசைக் கலைஞர் தெருக்குரல் அறிவு.

therukural arivu the ambassa band ilayaraaja

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக உலக அளவில் அறியப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. 80களில் இருந்து இசையமைத்து வரும் இளையராஜா இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். தொழிற்நுட்பங்களே வளராத காலகட்டத்தில் இருந்து இசையமைத்து வரும் இளையராஜா இன்றைக்கும் பலரது தூக்கத்திற்கு துணையாக இருக்கின்றார், வழிப்போக்கனாக இருக்கின்றார், ஏன் மனதை சாந்தப்படுத்தும் மனநல மருத்துவராக இருக்கின்றார் என பலர் கூறியும் கேட்டதுண்டு.

therukural arivu the ambassa band ilayaraaja

அதிர்ச்சி: இப்படியான இளையராஜா சில நேரங்களில் மிகவும் கோபமாகவும் கர்வமாகவும் நடந்துகொள்வதுண்டு. இதனை பல திரைப்பிரபலங்கள் நியாயப்படுத்தியும் வருகின்றனர். குறிப்பாக அது வித்யா கர்வம், அது எல்லோருக்கும் இருக்கும். இளையராஜாவுக்கு இருப்பதும் சரியானதுதான் எனக் கூறுகின்றனர். ஆனால் இவரது கர்வம் மிகுந்த நடவடிக்கைகள் சாமானிய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்துகின்றது.

therukural arivu the ambassa band ilayaraaja

நெகிழ்ச்சி: ஆனால் இப்படியான இளையராஜாவை சிரித்து சிரித்து மனம் நெகிழவைத்துள்ளார்கள் தெருக்குரல் அறிவு மற்றும் அவரது நண்பர்களான தி பேஸ் பேண்ட் இசைக் குழுவினர். இவர்கள் அனைவரும் சில தினங்களுக்கு முன்னர் இளையராஜாவைச் சந்தித்துள்ளனர். அப்போது இளையராஜாவைச் சுற்றி நின்றுகொண்டு, " இன்னும் என்னை வெகுதூரம் கூட்டிச் செல்லய்யா... ஜென்மம் பல உன் பாட்டைக் கேட்கச் சொல்லய்யா... இசைஞானி இளையராஜா.. என்னை ஆளும் இதய ரோஜா.." எனப் பாடினர். இவர்களின் பாட்டைக் கேட்ட இளையராஜா நெகிழ்ந்து போனார்.

ஆசீர்வாதம்: அதன் பின்னர் இவர்கள் அனைவரும் இளையராஜா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோவை தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவுக்கு, "பேரிசை பெருமகனார் இசைஞானி இளைராஜா அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட தருணம்" என கேப்ஷன் இட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X