Don't Miss!
- News
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! குடியரசுத் தலைவர் முர்மு உரை நிகழ்த்துகிறார்!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
என் திமிரான தமிழச்சி.. காதலில் விழுந்த தெருக்குரல் அறிவு.. யாரை காதலிக்கிறாரு தெரியுமா?
சென்னை: 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் மூலம் உலகளவில் பிரபலமான ராப் பாடகர் தெருக்குரல் அறிவு தனது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு.
'என்ஜாய் எஞ்சாமி' பாடல் மூலம் எந்தளவுக்கு புகழ் கிடைத்ததோ அதே பாடல் இவரை பெரிய மனவேதனையிலும் ஆழ்த்தியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த
இளம்
வயதிலேயே
வெண்ணிலா
கபடி
குழு
நடிகர்
ஹரி
வைரவன்
மரணம்
ஏன்..
பரிதாப
பின்னணி

தெருக்குரல் அறிவு
அறிவரசு கலைநேசன் எனும் தெருக்குரல் அறிவு ரஜினிகாந்தின் காலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். வடசென்னை, வந்தா ராஜாவாதான் வருவேன், நட்பே துணை, இரண்டாம் உலகப் போரின் கடைசிகுண்டு, பட்டாஸ், டகால்டி, நாடோடிகள் 2, நான் சிரித்தால், ஜிப்ஸி, சூரரைப் போற்று, துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் பாடி உள்ளார்.

என்ஜாய் எஞ்சாமி புகழ்
சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் அவரது மகள் பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி பாடலி உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆதிக்குடிகளின் வேர்களைத் தொட்டு பாடல் வரிகளை உருவாக்கி இருந்தார் தெருக்குரல் அறிவு. பல நூறு மில்லியன்களை கடந்த அந்த பாடல் தெருக்குரல் அறிவை சர்வதேச ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் செய்தது. வெளிநாடுகளில் எல்லாம் இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

வெடித்த சர்ச்சை
சர்வதேச இதழான ரோலிங் ஸ்டோனில் தெருக்குரல் அறிவு இடம்பெறாமல் பாடகி தீ மட்டும் அட்டைப் படத்தில் இடம்பெற்றது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே பிரிவு ஏற்படவே இந்த சர்ச்சை பெரிய காரணமாக மாறியது. ஒரே இரவில் உங்களுடைய உழைப்பை திருட முடியாது என தெருக்குரல் அறிவு பதிவிட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

காதலில் விழுந்த தெருக்குரல் அறிவு
தெருக்குரல் அறிவு குறித்த சர்ச்சைகள் டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது அவர் காதலில் விழுந்துள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே தனது காதலியை வித்தியாசமாக வெறும் கால்களை மட்டுமே காட்டி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அறிமுகப்படுத்தி உள்ளார்.

என் திமிரான தமிழச்சி
"For miles together.. We are the wildest love of our ancestors kalpana_ambedkar என் திமிரான தமிழச்சி." என தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காதலை அறிவித்துள்ளார் தெருக்குரல் அறிவு. அவருடைய இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் பலரும் வாவ்.. சூப்பர் வாழ்த்துக்கள்.. என வாழ்த்தி வருகின்றனர்.

காதலி யார்
கல்பனா அம்பேத்கர் என தனது காதலியின் முகத்தை காட்டாமல் வெறும் கால்களை காட்டி காதலை அறிவித்தாலும், நல்ல வேளையாக ஐடியை அறிவு ஷேர் செய்த நிலையில், அந்த கல்பனா யார் என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. தெருக்குரல் அறிவை போலவே இவரும் பெரியார் மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சித்தாந்தங்களின் வழி நடப்பவர் என்பது தெளிவாகிறது. கல்பனா இன்ஸ்டா பக்கத்தில் தெருக்குரல் அறிவு குறித்த ஏராளமான போஸ்ட்டுகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.