உயிர்ப்போடு நிமிர்ந்தெழும் உலகத் தமிழர் வாழ்வினி… தெருக்குரல் அறிவு ஸ்டாலினுக்கு வாழ்த்து !
சென்னை : முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கும் , தொல் திருமாவளவனுக்கும் தெருக்குரல் அறிவு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6ந் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் நேற்றுக் காலை 8 மணி முதல் மும்முரமாக எண்ணப்பட்டன.
தனிப்பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கிறது.

பதிவியேற்பு
மே7ந் தேதி திமுகத் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் எனத் தெரிகிறது.

ஆசி பெற்றார்
சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்த தனது தயார் தயாளு அம்மாவை சந்தித்து ஆசிபெற்றார். அதைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உலகத் தமிழகர் வாழ்வு
அந்த வகையில் தெருக்குரல் அறிவு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சமூக மாற்றத்திற்கான கலைகளை ஊக்குவித்து, போராடும் மக்களின் போர்க்குரலாய் உடனின்று மண்ணை, மக்களை, பண்பாட்டை,பகுத்தறிவை, உரிமைகளைக் காக்கும் நல்லாட்சி விடிந்ததால் உயிர்ப்போடு நிமிர்ந்தெழும் உலகத் தமிழர் வாழ்வினி என்று கூறியுள்ளார்.

வாழ்த்து
அதேபோல, தொல் திருமாவளவனுக்கும் தனது வாழ்த்தை கூறியுள்ளார். சாதிய, மதவாத,பாசிச சக்திகளை தம் அயரா உழைப்பாலும், அறிவார்ந்த யுக்திகளாலும் நிலைகுலையச் செய்து, ஜனநாயக வெளிச்சம் பாய்ச்சும் இந்திய அரசியலின் திசைவழிப்போக்கு எழிச்சித்தமிழர் திருமாவளவன் என புகழ்ந்துள்ளார்.மேலும், ஆளுர் ஷா நவாஸ்,எஸ்.எஸ்.பாலாஜி, சிந்தனை செல்வன், பனையூர் பாபு ஆகியோருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications











