டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய 2 பேர்.. அதிர்ச்சியில் அன்பு கேங்!
சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் முதல் நபராக ஜித்தன் ரமேஷ் வெளியேறிய நிலையில் இரண்டாவதாக எவிக்ட்டான நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஹவுஸ்மேட்ஸ்களால் நாமினேட் செய்யப்படும் நபர்களில் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வாரம் ஜித்தன் ரமேஷ், சோம், கேபி, நிஷா, ரம்யா, ஷிவானி ஆகிய 6 பேர் ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்பட்டனர்.

இரண்டு பேர் எவிக்ட்டட்
இதனால் யார் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இந்த சீசனில் முதல் முறையாக ஒரே வாரத்தில் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கமல் போட்ட குண்டு
இன்றைக்கான முதல் புரமோவில் பேசிய கமல் இந்த வாரம், ஜோடியாய் விளையாடினால் ஜோடியாகதான் வெளியே போக வேண்டும் என்று சொல்லியும் கேட்கவில்லை. தான் கேள்விப்பட்டவரை இன்று டபுள் எவிக்ஷன், இன்று ஒருவரும் நாளை ஒருவரும் வெளியேற்றப்படுவார்கள் என்றார்.

நாளை யார்?
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஜித்தன் ரமேஷ் வெளியேறியதாக தகவல் பரவியது. இந்நிலையில் நாளைய எபிசோடுக்கான ஷுட்டிங்கும் இன்றே நிறைவடைந்ததால் நாளை யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஜோடி புறாக்கள்
அதாவது நாளைய எபிசோடில் நிஷாதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்று தெரியவந்துள்ளது. ஜித்தன் ரமேஷும் நிஷாவும் பிக்பாஸ் வீட்டில் ஜோடியாகவே சுற்றி வந்தனர்.

அடித்து.. கட்டியணைத்து..
தன்னை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், அதற்கு உங்களுக்கு முழு அனுமதியும் உரிமையும் உண்டு என்று ஜித்தன் ரமேஷிடம் கூறினார் நிஷா. மேலும் அவரை அடித்து விளையாடுவது பின்னால் இருந்து கட்டியணைப்பது என ஓவர் நெருக்கம் காட்டி வந்தார்.

கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்
இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார் நிஷா. மேலும் விஜய் டிவி புராடெக்ட்ஸ் மட்டும் வாரா வாரம் காப்பாற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சமூக வலைதளங்களிலும் விஜய் டிவியை கழுவி உற்றினர் நெட்டிசன்கள்.

ஒரே அடியாய் 2 பேர்
இந்நிலையில் அன்பு கேங் என்று அழைக்கப்படும் அர்ச்சனாவின் டீம்மில் இருந்து ஒரே அடியாய் இரண்டு பேரை அடுத்தடுத்து தூக்கியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவுக்கு மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை காட்டிலும் நிஷாதான் ரொம்ப க்ளோஸ்.

அதிர்ச்சியில் அன்பு கேங்
இறுதியாக நேற்றைய எபிசோடிலும் நிஷாதான் கேப்டனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார் அர்ச்சனா. இந்நிலையில் இன்று நிஷா வெளியேற்றப்பட்டிருப்பது அர்ச்சனாவுக்கும் அன்பு கேங்குக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











