ரிலீசுக்கு காத்திருக்கும் விவேக் கடைசியாக நடித்த 3 படங்கள்

சென்னை : நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். ஏராளமான ரசிகர்கள், திரை பிரபலங்கள் திரண்டு வந்து விவேகிற்கு இறுதி மரியாதை செலுத்தினர். விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

Recommended Video

நடிகர் விவேக் பற்றி அறியாத சில உண்மைகள் | RIP Vivek, Vivek Biography

விவேக் கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதில் டாக்டராக நடித்த விவேக்கின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து விவேக் நடித்த முக்கியமான 3 படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.

விஜய் சேதுபதியுடன் விவேக்

விஜய் சேதுபதியுடன் விவேக்

இதில் முதலில் வெளிவர போகும் படம் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த யாதும் ஊரே யாவரும் கேளீர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விவேக்கின் கேரக்டர் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

மரணத்திற்கு பின் முதல் படம்

மரணத்திற்கு பின் முதல் படம்

விவேக்கின் மரணத்திற்கு பிறகு வெளிவர போகும் முதல் படம், யாதும் ஊரே யாவரம் கேளீர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகத் இயக்கி உள்ளார். மேகா ஆகாஷ், ரித்விக்கா, கனிகா, மோகன் ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மணாலி சென்ற விவேக்

மணாலி சென்ற விவேக்

அடுத்ததாக விவேக் நடித்துள்ள படம் லெஜன்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஜெடி ஜெர்ரி இயக்கி உள்ளார். இந்த படத்தின் சூட்டிங்கிற்காக மணாலி சென்றிருந்த பொது எடுத்த ஃபோட்டோக்களை சமீபத்தில் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

விவேக்கால் கவனிக்கப்படும் இந்தியன் 2

விவேக்கால் கவனிக்கப்படும் இந்தியன் 2

இவற்றைத் தொடர்ந்து விவேக் நடித்த, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2. இந்த படத்திற்காக விவேக்கை வைத்து ஏற்கனவே சில காட்சிகளை படமாக்கி விட்டனர். இந்த படம் பற்றிய தெளிவான விபரங்கள் தெரிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

என்ன செய்ய போகிறார் ஷங்கர்

என்ன செய்ய போகிறார் ஷங்கர்

வேறு யாரையாவது வைத்து விவேக் கேரக்டருக்கு டப்பிங் பேச வைப்பாரா ஷங்கர், அல்லது விவேக் கேரக்டரை முற்றிலுமாக நீக்கிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விவேக் நடித்து, அவர் மரணத்திற்கு பிறகு வெளியாக போகின்றன என்பதால் இந்த 3 படங்களும் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X