செம.. இதுவரைக்கும் 8 பேர் பிக்பாஸ்க்கு கன்ஃபார்ம் ஆயிருக்காங்களாம்.. யார் யாருன்னு பாருங்க!
சென்னை: கொரோனா பரிசோதனைக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வான பிரபலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் முதல் தொடங்கவுள்ளது.
இதற்கான பணிகளில் நிகழ்ச்சி குழு தீவிரமாய் ஈடுபட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதமாகியுள்ளது.

80 நாட்கள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா தடுப்பு வழி முறைகளுடனும் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வெறும் 12 போட்டியாளர்களுடன், 80 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

கொரோனா பாஸிட்டிவ்?
மேலும் போட்டியாளர்கள் குறித்தும் நாள்தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முழுக்க நிகழ்ச்சிக்கு தேர்வான பிரபலங்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இரண்டு பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் தகவல் வெளியானது.

தகுதி பெற்ற பிரபலங்கள்
கொரோனா நெகட்டிவ் உள்ள போட்டியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும் நிகழ்ச்சி குழு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதி பெற்ற பிரபலங்களின் பெயர்கள் கசிந்துள்ளன.

அனு மோகன்
அதன்படி இயக்குநரும் நடிகருமான அனு மோகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அனுமோகன் இது ஒரு தொடர்கதை நினைவு சின்னம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ரஜினிக்காந்தின் படையப்பா படத்தில் நடித்திருந்தார். அதில் அவர் படையப்பரே எப்படி அந்த பாம்பு புத்துக்குள்ள கைய விட்டீங்க என்று கேட்கும் டயலாக் பெரும் பிரபலமானது.

ரியோ ராஜ்
அடுத்து விஜேவும் நடிகருமான ரியோ ராஜ். கடந்த சில நாட்களாகவே அவரது பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்டு வந்த நிலையில் தற்போது அவர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேப்ரில்லா
அடுத்து சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த நடிகை கேப்ரில்லா சார்ல்ட்டன். கேப்ரில்லா ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கேப்ரில்லா, 3, சென்னையில் ஒரு நாள், அப்பா, அப்பா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜித்தன் ரமேஷ்
அடுத்து நடிகர் ஜித்தன் ரமேஷின் பெயரும் பிக்பாஸில் பங்கேற்க போகும் பிரபலங்களின் பட்டியலில் உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ரமேஷ், தமிழில் ஜித்தன் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பல படங்களில் நடித்துள்ள ஜித்தன் ரமேஷால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பிக்பாஸில் பங்கேற்கிறார் ஜித்தன் ரமேஷ்.

ஷிவானி நாராயணன்
சீரியல் நடிகையான ஷிவானி நாராயணனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாடலான ஷிவானி நாராயணன் சரவணன் மீனாட்சி சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பகல் நிலவு சீரியல் ஸ்னேகா என்ற கேரக்டரில் நடித்து பெரும் பிரபலமானார். சமூக வலைதளங்களி எப்போதும் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து மிரளவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா பாண்டியன்
அடுத்து நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தில் மல்லிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமானார் நடிகை ரம்யா பாண்டியன். அடிக்கடி சேலையில் போட்டோ ஷுட் நடத்தி கிறங்க வைத்து வருகிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளார்.

சிங்கர் அஜித்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு செலிபிரிட்டி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 டைட்டில் வின்னரான அஜித் தான் அது. இதற்கு முன்பு பங்கேற்ற போட்டியாளர்கள் ஆரவ் மற்றும் கவின் ஆகியோரின் சொந்த ஊரான திருச்சியை சேர்ந்தவர்தான் இந்த அஜித்.

சனம் ஷெட்டி
இதேபோல் நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியின் பெயரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதியாகியுள்ளது. சனம் ஷெட்டி பல படங்களில் நடித்துள்ளார். கடந்தே சீசனில் பங்கேற்ற பிக்பாஸ் பிரபலமான தர்ஷனின் முன்னாள் காதலியாவார் சனம் ஷெட்டி. இந்நிலையில் சனம் ஷெட்டியும் இந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.

ஹோம் குவாரண்டைன்
இவர்கள் அனைவரும் தற்போது ஹோம் குவாரண்டைனில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் இன்னும் சில பிரபலங்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓபனிங் கலை நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகள் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











