Bigil highlights: அத்திவரதர்.. நேசமணி.. கருப்பு உடை.. டார்ச்லைட்.. வெறித்தனமான பிகில் விழா ஹைலைட்ஸ்

பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில முக்கியமான ஹைலைட் சம்பவங்கள் பற்றிய ஒரு பார்வை.

Recommended Video

Bigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்

சென்னை: பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு, நடை, உடை என பல சுவாரஸ்யமான விசயங்கள் இருந்தது.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த நடுவீரப்பிட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த விழாவை விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

நேற்றைய விழாவில் நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

கால்பந்து பயிற்சி

கால்பந்து பயிற்சி

பிகில் திரைப்படம் மகளிர் கால்பந்து பற்றியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த படத்திற்காக விஜய் கடுமையாக உழைத்து ஃபுட்பால் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பது தான் ஹைலைட். இந்த தகவல் நேற்றைய இசை வெளியீட்டு விழாவில் பகிரப்பட்டது.

விஜய்யின் வெறித்தனம்

விஜய்யின் வெறித்தனம்

பிகில் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய ஹைலைட் வெறித்தனம் பாடலை விஜய் பாடியது தான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் இந்த பாடலை பாடிய போது, அரங்கமே ஆர்ப்பரித்தது. அவருடன் சேர்ந்து ரசிகர்களும் இப்பாடலை பாடி மகிழ்ந்தனர்.

விவேக்கின் ஜாலி பேச்சு

விவேக்கின் ஜாலி பேச்சு

விழாவில் பேசிய நடிகர் விவேக், விழா அரங்குக்கு வருவதற்கு தனக்கு 3 மணி நேரம் ஆனதாகக் குறிப்பிட்டார். அத்திவரதர் தரிசனத்துக்கு பிறகு பிகில் ஆடியோ லாஞ்சில் தான் இவ்வளவு கூட்டத்தை பார்ப்பதாக அவர் கலாய்த்தார். வெற்றி எப்போதும் ஒரு போதை தரும் ஆனால் அது விஜய் தலையில் ஏறியதே இல்லை என்றார் அவர். வழக்கம் போல விவேக்கின் இந்த ஜாலியான பேச்சு விழாவின் ஹைலைட்டானது.

நேசமணி மீம்ஸ்

நேசமணி மீம்ஸ்

உலகையே அதிர வைத்த நேசமணி மீம்ஸ் ஒன்று விஜய்க்கு போட்டு காட்டப்பட்டது. அதைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என விஜய்யிடம் ரம்யா கேட்டார். அதற்கு விஜய், "ஆணியே... " என்று சொல்ல தொடங்க, அரங்கே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பிரெண்ட்ஸ் படத்தில் அந்த காட்சியை எடுக்கும் போது தான் சிரித்துக் கொண்டே இருந்ததாகவும், சூர்யா சிரிப்பை அடக்கிக்கொண்டதாகவும் கூறினார். வடிவேலு, விவேக் கூடவெல்லாம் நடிப்பது மிகவும் கடினம் என்றார் விஜய்.

பல சுவாரஸ்யங்கள்

பல சுவாரஸ்யங்கள்

விஜய் கருப்பு நிற உடை அணிந்து வந்தது, விழாவுக்கு வந்ததும் ரசிகர்களை நோக்கி தனது மொபைல் போனில் டார்ச் லைட் அடித்து காட்டியது என பிகில் விழாவில் ஏகப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக விழாவில் விஜய்யின் பேச்சு பெரிய ஹைலைட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X