கையில் நயா பைசா இல்லாமல் இருக்கும் திரையுலக பிரபலங்கள்
மும்பை: கோடி, கோடியாய் சம்பாதிக்கும் பாலிவுட் பிரபலங்கள் கையில் காசு இல்லை என்றால் நம்ப முடிகிறதா?
பாலிவுட் பிரபலங்கள் பலர் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். சல்மான் கான் எல்லாம் கோடிகளில் புரளுகிறார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாங்கும் சம்பளத்தை கேட்டே பலருக்கு தலை சுற்றுகிறது.

அவ்வளவு பெரிய பணக்காரர் கையில் பணம் இல்லை என்றால் நம்புவீர்களா, ஆனால் அது தான் உண்மை. அதாவது சல்மான் கான் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் கையில் சுத்தமாக காசு இல்லாமல் கிரெடிட், டெபிட் கார்டுகளை மட்டும் தான் வைத்துள்ளார்களாம்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் வெளியே சென்றபோது ஒரு சிறுமி வந்து பிச்சை கேட்க அவர் கையில் காசு இல்லாமல் தன் கார் டிரைவரிடம் பணம் கடன் வாங்கி கொடுத்தாராம்.
அண்மையில் பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா தன் கையில் பணம் இல்லாததால் பிச்சை கேட்டவர்களை பார்த்தும், பார்க்காதது போன்று அவசரமாக இடத்தை காலி செய்துள்ளார். அவர் திமிரில் அப்படி செய்யவில்லை, கையில் சுத்தமாக காசு இல்லாததால் வேறு வழியில்லாமல் செய்தாராம்.
சல்மான் கான் தன்னிடம் பிச்சை கேட்ட சிறுவனுக்கு கொடுக்க கையில் பணம் இல்லாததால் அவரை கட்டிப்பிடித்துவிட்டு சென்றுள்ளார். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யனும் காசு இல்லாமல் பிச்சை கேட்ட பிள்ளையின் தலைமுடியை கோதிவிட்டு சென்றுள்ளார்.
பிரபல நடிகர் ரன்பிர் கபூரும் இப்படி கையில் காசு இல்லாமல் பிச்சை எடுப்பவர்களிடம் சிக்கி விழித்துள்ளார். ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், நடிகா சோனாலி பிந்த்ரேவின் கணவர் கோல்டி பெஹலும் கூட கையில் காசு வைத்திருப்பது இல்லையாம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டபோது இயக்குநர் மகேஷ் பட் வீட்டில் உணவு இல்லையாம். இதையடுத்து அவர் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அப்பொழுது கார்டு பயன்படுத்தும் எந்திரம் இல்லாததால் பணம் கேட்டுள்ளனர். மகேஷ் பட் கையில் சுத்தமாக பணம் இல்லையாம்.


Click it and Unblock the Notifications











