twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துப்பறிவாளன் 2.. கண்டிஷன் போட்ட மிஷ்கின்.. படத்திலிருந்து தூக்கி வீசப்பட இதுதான் காரணமா?

    |

    சென்னை: துப்பறிவாளன் 2 படத்திலிருந்து, அண்மையில் இயக்குநர் மிஷ்கின் அதிரடியாக நீக்கப்பட்டது, கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

    Recommended Video

    Myskkin Vs Vishal | Thupparivalan 2 Controversy | Vishal Film factory

    மேலும், துப்பறிவாளன் 2 படத்தை, நடிகர் விஷாலே இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதும், நடிகர் விஷாலுக்கு எதிரான பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் போது, இயக்குநர் மிஷ்கின் போட்ட அதிரடி கண்டிஷன்கள் தான் அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அதிக சம்பளம்

    அதிக சம்பளம்

    துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின், விஷால் தயாரிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். லண்டனில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் முன்னதாக, சில கண்டிஷன்களை மிஷ்கின் விஷாலிடம் வைத்ததே இந்த படத்தில் இருந்து மிஷ்கின் தூக்கி வீசப்பட காரணமாக மாறியுள்ளது. அதில் முக்கியமானது, ரூ. 5 கோடி சம்பளம் தானாம்.

    ரீமேக் உரிமை

    ரீமேக் உரிமை

    மேலும், இயக்குநருக்கு இந்தி ரீமேக் உரிமை மட்டுமே கிடைத்துள்ளது. தயாரிப்பாளருக்கு இதில் எவ்வித உரிமையும் கிடையாது. இயக்குநர் இந்தி திரைப்பட ரீமேக்கை எவருக்கும் விற்க முடியும், மேலும் தயாரிப்பாளருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளது விஷால் தரப்பை மேலும் டென்ஷன் ஆக்கியுள்ளதாம்.

    அனைத்தும் எனக்கே

    அனைத்தும் எனக்கே

    விஷால் ஒரு நடிகராகவும், விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரியை தயாரிப்பாளராகவும் கொண்டுள்ள இப்படம் கடைசியாக இருக்கும் என்பதால், அனைத்து அறிவுசார் சொத்துரிமையில் தலைப்பு, படத்தின் தொடர்ச்சிகள் ( Sequels and Prequels ) மற்றும் அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்களும் உள்ளடங்கியிருக்கும். ஆனால் கனியன் பூங்குன்றன் பெயருக்கு மட்டும் அல்ல. மனோகரன் மற்றும் துப்பறிவாளன்- 1, துப்பறிவாளன்- 2 படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்களும் இயக்குநருக்கு சொந்தமாகும் என்ற கண்டிஷனையும் போட்டுள்ளார்.

    தாமதம் ஆனால்

    தாமதம் ஆனால்

    இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் தொடக்கத்திலிருந்து 90 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெறாவிட்டால் இயக்குநர் மற்ற படங்களில் இணைந்து பணியாற்றலாம். எந்தவொரு காரணத்திற்காகவும், 90 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடையவில்லை என்றால், இயக்குநர் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் வரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க ஒப்புக் கொள்ள வேண்டும் போன்ற கண்டிஷனும் இடம் பெற்றிருக்கிறது.

    அவர் மட்டுமே

    அவர் மட்டுமே

    தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகளுக்கு இயக்குநருடன் நேரடி அணுகல் இருக்காது. இயக்குநரின் மேலாளர் திரு. எல்.வி. ஸ்ரீகாந்த் லக்ஷ்மன் மட்டுமே இயக்குநரை தொடர்புகொள்ளும் புள்ளியாக செயல்படுவார். விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரியால் நியமிக்கப்பட்ட UK தயாரிப்பாளர் திரு. சர்மாட் மட்டுமே தயாரிப்பாளரை தொடர்பு கொள்ளும் புள்ளியாக செயல்படுவார்.

    கரெக்ட்டா கொடுக்கணும்

    கரெக்ட்டா கொடுக்கணும்

    66,000 ரூபாய் அலுவலக வாடகை மற்றும் 5,000 ரூபாய் பராமரிப்பு தொகை தயாரிப்பாளர்களால் செலுத்தப்படும். டி.டி.எஸ் சான்றிதழ், கழிக்கப்பட்டால், தணிக்கைக்கு முன் வழங்கப்படும். அலுவலக வாடகைக்கு மேல் கூடுதலாக, மின்சார செலவு, உணவு செலவுகள் மற்றும் பிற தற்செயலான அலுவலக செலவுகள் போன்றவை திட்டப்பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து நகல் ஒப்படைக்கப்படும் வரை தயாரிப்பாளரால் ஏற்கப்படும்.

    தலையிடக் கூடாது

    தலையிடக் கூடாது

    இயக்குநர் தனது படைப்பு சுதந்திரம், ஆக்கபூர்வமான முடிவெடுக்கும் முறைமை ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது இயக்குநர் மற்றும் அவரது ஊழியர்கள் அவமதிக்கப்படுதல், துஷ்பிரயோகம் செய்யப்படுதல், அச்சுறுத்தப்படுதல், மோசமாக நடத்தப்படுதல், மேலும், இயக்குநரின் உளவியலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏதேனும் சம்பவம் நடந்ததேயானால் இயக்குநரும் அவரது குழுவினரும் இப்படத்திலிருந்து வெளியேற முழு உரிமை உண்டு.

    இயக்க மாட்டேன்

    இயக்க மாட்டேன்

    மேற்சொன்ன விவரங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், அதன் சாராம்சம், முறையான ஒப்பந்தத்தில் சுருக்கமாக எழுதப்பட்டு, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் கையெழுத்திடப்படும். மேற்கூறிய விஷயத்தில் ஏதாவது ஒன்றை தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், துப்பறிவாளன்- 2 படத்தை பொறுத்தவரை, விஷால் ஃபிலிம் ஃபேக்டரிக்கு செய்யும் வேலைகளை இயக்குநர் நிறுத்தலாம்.

    இப்படியொரு கண்டிஷனை பார்த்து கடுப்பான நடிகர் விஷால், இயக்குநர் மிஷ்கினை படத்திலிருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இது குறித்து, நடிகர் விஷால் விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Vishal’s Film Factory officially announced the reason why they threw away Mysskin from Thupparivaalan 2 project.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X