கொரோனா பார்த்த வேலை.. ரசிகர்களுக்கு இந்த வருடம் டிஜிட்டல் தீபாவளிதானா? எந்தெந்த படங்கள் ரிலீஸ்?

By

சென்னை: இந்த வருட தீபாவளியை டிஜிட்டலில் கொண்டாட இருக்கிறார்கள், சினிமா ரசிகர்கள்.

தியேட்டர்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் ரசிகர்கள் வருவார்களா என்பது சந்தேகம்தான்.

அதனால், இந்த வருட தீபாவளி கொண்டாட்டத்தை, டிஜிட்டலுக்கு மாற்றியிருக்கிறது கொரோனா வைரஸ் .

முறித்த கொரோனா

முறித்த கொரோனா

பட்டாசுகளை தியேட்டரில் வெடிப்பதும் தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் படங்களை நண்பர்களுடன் ஆர்ப்பாட்டமாகப் பார்ப்பதும் கட் அவுட், பாலாபிஷேகம் என அதை அமர்க்களமாகக் கொண்டாடுவதும்தான், சினிமா ரசிகர்களின் வழக்கமான தீபாவளி. இந்தக் கொண்டாட்டத்தின் குரல் வளையை அப்படியே முறித்துவிட்டது கொரோனா.

திறக்க அனுமதி

திறக்க அனுமதி

இந்தப் பெருந்தொற்று காரணமாக, மற்றத் தொழில்களைப் போல சினிமா தொழிலும் கடும் பாதிப்படைந்து உள்ளது. லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, மற்ற தொழில்கள் இயல்பாகிவிட்ட நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் தியேட்டர் திறப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

முடிவு கிடைக்கும்

முடிவு கிடைக்கும்

இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாததால், ஒடிடி தளங்களில் படங்களை வெளியிட்டு வருகின்றனர், சில தயாரிப்பாளர்கள். அதன் அப்படிப்படையில். இந்த வருட தீபாவளிக்கு சில படங்கள் வெளியாவது உறுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விமானம்

பட்ஜெட் விமானம்

சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்துள்ள சூரரைப் போற்று படம், தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன் நவம்பர் 12 அம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. சுதா கொங்கரா இயக்கி இருக்கும் இந்தப் படம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது. இது, பட்ஜெட் விமானத்தை முதன்முதலில் இயக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டது.

அம்மன் டிரைலர்

அம்மன் டிரைலர்

நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் நவம்பர் 14 ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. என்.ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜியும் இயக்கி உள்ளார். இதன் டிரைலர் வரவேற்பை பெற்றிருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

சன் டிவியில் நேரடியாக

சன் டிவியில் நேரடியாக

நவம்பர் 14 ஆம் தேதி நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகிறது, நாங்க ரொம்ப பிஸி படம். பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெளியான மாயாபஜார் என்ற படத்தின் ரீமேக் இது. பணமதிப்பிழப்பு நேரத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

பேச்சுவார்த்தை முடியல

பேச்சுவார்த்தை முடியல

விஷால் நடித்துள்ள சக்ரா படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால், இன்னும் உறுதியாவில்லை. சில ஓடிடி நிறுவனங்களிடம் பேசி வருகின்றனர். இதே போல சந்தானம் நடித்துள்ள, பிஸ்கோத் படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

உறுதி செய்யலை

உறுதி செய்யலை

அட்லி தயாரித்துள்ள அந்தகாரம், ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படங்களும் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், உறுதிச் செய்யப்படவில்லை. இது தவிர, காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி பாம் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X