twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குவாரண்டினும்.. கே.எஸ். ரவிக்குமாரும்.. முத்து மட்டுமல்ல.. இந்த படங்களையும் பார்க்கலாம்!

    |

    சென்னை: மனித ஒற்றுமையை சீர் குலைத்து, மனிதனை மனிதன் நெருங்க விடாமல் உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது.

    Recommended Video

    கொரோனா - TV SERIAL அவ்ளோதானா ! | TALKING 2 MUCH EP-3 | FILMIBEAT TAMIL

    இந்தியாவில் 21 நாட்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி டோட்டல் ஷட் டவுனை அறிவித்துள்ளார்.

    தியேட்டர்கள் இன்றி புதுப்படங்களை பார்க்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு, டிவி, மொபைல், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை தான் தற்போது, ஒவ்வொரு நாளையும் கடக்க உதவுகிறது.

    இந்த குவாரண்டின் காலத்தை கே.எஸ். ரவிக்குமாரின் சில அட்டகாசமான நகைச்சுவை திரைப்படங்களை பார்த்து கடக்கலாம்.

    கோ கொரோனா கோ.. கொடிய வைரஸை விரட்ட.. அகில உலக சூப்பர்ஸ்டாரின் அசத்தலான வீடியோ!கோ கொரோனா கோ.. கொடிய வைரஸை விரட்ட.. அகில உலக சூப்பர்ஸ்டாரின் அசத்தலான வீடியோ!

    அந்த படங்கள் வேண்டாம்

    அந்த படங்கள் வேண்டாம்

    கொரோனா வைரஸை முன்னதாக கணித்த Contagion படம் இந்த நேரத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஏற்கனவே செய்தி சேனலை போட்டு பார்த்தால், பீதியைக் கிளப்பும் செய்திகளும், உலுக்க வைக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிரவைத்து வரும் நிலையில், 2012, Contagion, Zombie உள்ளிட்ட படங்களை குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்க்கலாம்.

    டிரெண்டாகும் முத்து

    டிரெண்டாகும் முத்து

    கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படம் இன்று சன் டிவியில் போடப்பட்டது. எத்தனையோ முறை அந்த படத்தை பார்த்து இருந்தாலும், இந்த நேரத்தில் அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்தை காட்டி வருகின்றனர் என்பது, டிரெண்டான #Muthu மூலமாகவே உணர்ந்து கொள்ளலாம்.

    மின்சார கண்ணா

    மின்சார கண்ணா

    முத்து படத்தை மட்டுமல்ல, இந்த குவாரண்டின் காலத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய மின்சார கண்ணா படத்தை பார்த்தும் என்ஜாய் பண்ணலாம். 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய பாராசைட் படத்திற்கும், இந்த படத்திற்கும் கதையளவில் ஏகப்பட்ட பொருத்தங்கள் இருப்பது உண்மை.

    பஞ்சதந்திரம்

    பஞ்சதந்திரம்

    2020ம் ஆண்டிலும் 2002ம் ஆண்டில் வெளியான உலகநாயகன் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் மந்திரத்தை தன்னுள் அடக்கி இருக்கிறது. கே.எஸ். ரவிக்குமாரின் படைப்பில் வெளியான இந்த படத்தில், கமல்ஹாசன், நாகேஷ், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், யூகி சேது உள்ளிட்ட பலர் எவர்க்ரீன் காமெடி வேட்டை நடத்தி இருப்பார்கள்.

    வில்லன்

    வில்லன்

    நான் தல ஃபேன் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த படம் ஏதாவது சஜ்ஜஸ்ட் பண்ணுங்களேன் என கேட்கும் ரசிகர்களுக்கு இருக்கவே இருக்கு, வில்லன் படம். நடிகர் அஜித் இரு வேடங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய வில்லன் படத்தில், காமெடி, ஆக்‌ஷன், பாடல்கள் என எதற்குமே குறை இருக்காது.

    படையப்பாவும் பார்க்கலாம்

    படையப்பாவும் பார்க்கலாம்

    நீலம்பரி கதாபாத்திரத்தை உருவாக்கி உலகிற்கே Self Quarantine பற்றி பாடம் எடுத்த கே.எஸ். ரவிக்குமாரின் படையப்பா படத்தையும் குடும்பத்துடன் இந்த குவாரண்டின் காலத்தில் கண்டு ரசிக்கலாம். ரஜினிகாந்த், சிவாஜி, செளந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ராதா ரவி, நாசர், லக்‌ஷ்மி என படம் பட்டையை கிளப்பும்.

    தசாவதாரம்

    தசாவதாரம்

    இதெல்லாம் வேணாங்க, வைரஸ் பற்றிய படமேத்தான் பார்ப்பேன் என அடம்பிடிக்கும் ரசிகர்களுக்கும், இருக்கவே இருக்கு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான தசாவதாரம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரியில் 9 ரோல்களில் நடித்ததை பின்னுக்குத் தள்ளி 10 அவதாரங்களில் கமல் பின்னி எடுத்திருப்பார்.

    English summary
    KS Ravikumar’s Muthu, Minsara Kanna, Panchatanthiram, Padaiyappa and much more movies will help you to overcome this Corona virus quarantine period.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X