இன்று தண்டனை பெற்ற அந்த 6 பேர்....இவங்க தான்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்கிற்காக போர்டிங் ஸ்கூலாக பிக்பாஸ் வீடு மாறி உள்ளது. இதில் கண்டிப்பான ஆசிரியர்கள், குறும்புத்தனமான மாணவர்கள் என இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் வார்டன் சிபியின் பேச்சை கேட்காமல் முதல் நாளில் சேட்டை செய்து தண்டனை வாங்குகிறார் பிரியங்கா. வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் பிரியங்கா மற்றும் பாவ்னி இரவு முழுவதும் கார்டன் ஏரியாவிலேயே தூங்குகிறார்கள். மீண்டும் அதிகாலையில் தான் அவர்களை எழுப்பி, உள்ளே சென்று தூங்க சொல்கிறார் சிபி.

மாட்டிக் கொண்ட பாவ்னி, ஐக்கி

மாட்டிக் கொண்ட பாவ்னி, ஐக்கி

52 வது நாளின் இறுதியில் குச்சி, விசில் போன்றவற்றை திருடியது, ஆசிரியர்களை கிண்டல் செய்து படம் வரைந்தது போன்ற சேட்டைகளை செய்தது யார் என்பதை விசாரிக்கிறார் வார்டன் சிபி. தமிழ் ஆசிரியரான ராஜு, தாய் நாட்டின் மீது சத்தியமாக என அனைவரிடமும் சத்தியம் கேட்கிறார். இதில் குச்சியை எடுத்த பாவ்னி, மற்ற சேட்டைகளை செய்த ஐக்கி பெர்ரி ஆகியோர் மாட்டிக் கொள்கிறார்கள்.

ஐக்கி சொன்ன விளக்கம்

ஐக்கி சொன்ன விளக்கம்

ஐக்கி பெர்ரி தான் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு, இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என தெரிவிக்கிறார். தனது தலைமுடியின் நிறத்தை மாற்ற சொன்னது பிடிக்காமல் தான் இதை செய்ததாகவும் விளக்கமும் தருகிறார்.

தண்டனை பெற்றவர்கள்

தண்டனை பெற்றவர்கள்

இந்நிலையில் இன்றைய சிறந்த மாணவியாக தாமரையை தேர்வு செய்து பேட்ஜ் கொடுக்கிறார் சிபி. இன்றைய தண்டனை பெறுபவர்களாக பிரியங்கா, அபிஷேக் ஆகியோரின் பெயர்களை முதலில் சொல்கிறார். பிறகு குச்சியை திருடிய பாவ்னி, அதற்கு உதவியாக இருந்த இமான் அண்ணாச்சி ஆகியோர் லிவ்விங் ஏரியாவில் தூங்க வேண்டும் என தண்டனை கொடுக்கிறார்.

இது தான் தண்டனை

இது தான் தண்டனை

இதே போல் அனைத்து தவறுகளையும் ஒப்புக் கொண்டதற்காக ஐக்கி பெர்ரியை, நேற்று பிரியங்கா தூங்கிய இடத்தில், வீட்டிற்கு வெளியே தூங்க சொல்கிறார். இவரைத் தொடர்ந்து காலை முதல் ஆக்ரோஷமாக கத்தி, பூச்சாடி போன்றவற்றை உடைத்ததற்காக பாவ்னி, பிரியங்காவிற்கு துணையாக தூங்கியதை போல், இன்று அக்ஷரா, ஐக்கிக்கு துணையாக வெளியே தூங்க வேண்டும் என கூறினார்.

பரிசு வழங்கும் விழா

பரிசு வழங்கும் விழா

53 வது நாளில் பிடித்தமாவர்களுக்கு கடிதம் எழுதும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து போர்டிங் ஸ்கூலின் கடைசி நாளான இன்று, சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சாக்லேட் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாணவராக நிரூப்பை தேர்வு செய்து பேட்ஜ் கொடுத்தனர். டங்க் டுவிஸ்டர் பயிற்சியில் சிறப்பாக செய்ததற்காக அண்ணாச்சிக்கும், சிறப்பாக டான்ஸ் ஆடியதற்காக ஐக்கி பெர்ரிக்கும், சிறப்பாக குறும்பு செய்ததற்காக வருணுக்கும் சாக்லேட் வழங்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X