Top 5 Movies 2023: ஒரே ஆண்டில் 2000 கோடி வசூல்.. இந்த ஆண்டு தரமான சம்பவம் செய்த டாப் 5 படங்கள்!

சென்னை: தமிழ் சினிமா கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஒரு வாரம் படங்கள் ஓடினாலே கலெக்‌ஷனை அள்ளி வந்து கொட்டி விடுவதாக கூறுகின்றனர்.

ரசிகர்கள் படம் வந்த உடனே அடித்து பிடித்துக் கொண்டு பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலை வைத்து டாப் ஹீரோக்கள் பல கோடிகளை சம்பாதித்து வருவதாகவும் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் ஓனர்களின் டார்கெட்டும் அதுவாகவே உள்ளது என்றும் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 2000 கோடி வசூலை முன்னணி நடிகர்கள் நடித்த வெறும் 5 படங்களே ஈட்டியிருப்பதாகவும் மேலும், ஒரு 500 கோடி வசூலை மற்ற படங்கள் ஈட்டி தந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவு: இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு ஆரம்பமே செம ட்ரீட்டாக அமைந்த படம் துணிவு. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் பேங் ஹெயிஸ்ட் படத்தில் வங்கிகளில் நடக்கும் மோசடிகளை கருவாக வைத்து வெளியான படத்தில் அஜித்தின் லுக் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் அசத்தின. அஜித்தின் ஃபிளாஷ்பேக் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் சற்றே சொதப்பினாலும் படம் 200 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டியது.

These Top 5 Tamil movies of 2023 helps to Tamil Cinema crosses 2000 crores at Box Office

வாரிசு: பீஸ்ட் படம் காமெடி ஆக்‌ஷன் படமாக உருவானாலும் அதில் வெறும் ஆக்‌ஷன் மட்டுமே அதிகம் இருந்ததால் குடும்ப ரசிகர்களுக்காக ஒரு படத்தை கொடுக்கலாம் என நினைத்து தெலுங்கு இயக்குநர் வம்சி உடன் விஜய் கைகோர்த்தார். ஆனால், வாரிசு படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. மேலும், துணிவு படத்துடன் மோதிய நிலையில், வசூல் பெருமளவில் குறைந்தாலும் அந்த படம் 300 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.

These Top 5 Tamil movies of 2023 helps to Tamil Cinema crosses 2000 crores at Box Office

பொன்னியின் செல்வன் 2: மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இரண்டாம் பாகம் அதை விட அதிக வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிளைமேக்ஸில் இருந்த சிக்கல் மற்றும் கதை மாந்தர்களில் மணிரத்னம் வைத்த ட்விஸ்ட்டுகள் பொன்னியின் செல்வன் ரசிகர்களையே கடுப்பாக்கிய நிலையில், அதன் வசூல் 300 கோடியாக குறைந்து விட்டது.

These Top 5 Tamil movies of 2023 helps to Tamil Cinema crosses 2000 crores at Box Office

ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் டார்க் காமெடி மற்றும் ஆக்‌ஷன் படமாக வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. 525 கோடி வசூலை ஜெயிலர் படம் ஈட்டி இந்த வயதிலும் ரஜினிகாந்தால் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

These Top 5 Tamil movies of 2023 helps to Tamil Cinema crosses 2000 crores at Box Office

லியோ: விக்ரம் படம் 400 கோடி வசூல் ஈட்டிய நிலையில், எல்சியூ மோகம் பீக்கில் இருந்தது. லோகேஷ் கனகராஜ், விஜய் என்கிற ஹைப் மற்றும் ஆயுத பூஜையை குறி வைத்து சோலோ ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் 540 கோடி வசூல் ஈட்டி இந்த ஆண்டு தமிழ் சினிமா அசால்ட்டாக 2000 கோடி வசூலை தாண்ட உதவியுள்ளது. இதில் நடிகர் விஜய்யின் லியோ படம் மட்டும் 850 கோடிகளுக்கும் அதிகமாக வசூலை ஈட்டி தந்துள்ளன. இந்த படங்களை தவிர்த்து தனுஷின் வாத்தி, சிவகார்த்திகேயனின் மாவீரன், உதயநிதியின் மாமன்னன், அசோக் செல்வனின் போர் தொழில், விஷாலின் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களும் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வசூலை உயர்த்த உதவி உள்ளன.

These Top 5 Tamil movies of 2023 helps to Tamil Cinema crosses 2000 crores at Box Office

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X