twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது...மாநாடு இவங்க நடிக்க வேண்டிய படமா...வெங்கட் பிரபு சொன்ன மாஸ் தகவல்

    |

    சென்னை : நீண்ட கால தாமதம் மற்றம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக நவம்பர் 25 ம் தேதி மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அனைத்து தரப்பினரிடமும் பாசிடிவ் கமெண்ட்களை பெற்றுள்ளது.

    ரஜினி உள்ளிட்டோர் பாராட்டி வரும் நிலையில் முதல் நாளே சக்சஸ் பார்டி கொண்டாடி உள்ளனர் படக்குழுவினர். உலகம் முழுவதும் முதல் நாளே 10 கோடியை வசூல் செய்துள்ளது மாநாடு படம். அதனால் இந்த படம் பிளாக்பஸ்டர் பட அந்தஸ்தை விரைவில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநாடு படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா?மாநாடு படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா?

    வரவேற்பை பெற்ற மாநாடு

    வரவேற்பை பெற்ற மாநாடு

    மாநாடு படத்தில் அப்துல் கலீக் என்னும் லீட் ரோலில் சிம்புவும், தனுஷ்கோடி என்ற வில்லன் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். சிம்புவின் சினிமா வாழ்க்கையில் இது மிகச்சிறந்த படமாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    மக்கள் ஆதரவு

    மக்கள் ஆதரவு

    சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தையும் மீறி மாநாடு படம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருவதை கண்டு கோலிவுட்டே மிரண்டு போய் உள்ளது. நீண்ட கால தாமதத்திற்கு பிறகு ரிலீஸ் ஆனாலும் முதல் நாளே 10 கோடி வசூலை பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    பாராட்டிய விஜய்

    பாராட்டிய விஜய்

    10 ஆண்டுகளுக்கு முன் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை பாராட்டும் விதமாக தளபதி விஜய், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினரை அழைத்து பாராட்டியதுடன், விருந்தும் கொடுத்துள்ளார். அதற்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு மிகப் பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளார்.

    விஜய் நடிக்க வேண்டிய படமா

    விஜய் நடிக்க வேண்டிய படமா

    வெங்கட் பிரபு முதலில் மாநாடு படத்தின் கதையை விஜய்யிடம் தான் கூறினாராம். விஜய்க்கு அந்த கதை மிகவும் பிடித்து போனதால், இந்த கதையை தனது மாஸ் இமேஜிற்கு ஏற்ற மாதிரி திரைக்கதையாக தயாரிக்க சொல்லி விஜய் சொன்னாராம். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் விஜய் - வெங்கட் பிரபு காம்போ இணைய முடியாமல் போனதாம்.

    வில்லன் கூட இவர் இல்லையா

    வில்லன் கூட இவர் இல்லையா

    விஜய்யுடன் இணைய முடியாமல் போனதால் தான் மாநாடு படத்தில் சிம்புவை நடிக்க வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்தாராம். இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். அதே போல் தனுஷ்கோடி ரோலில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டது அரவிந்த் சாமி தானாம். ஆனால் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வந்ததாலும் வேறு சில காரணங்களாலும் தான் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

    வெங்கட் பிரபு சொன்ன தகவல்

    வெங்கட் பிரபு சொன்ன தகவல்

    அதற்கு பிறகு தான் தான் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசிய போது, கதை பிடித்து போய் இந்த கேரக்டரில் நடிக்க உற்சாகமாக ஒப்புக் கொண்டாராம். எனது டைரக்ஷனில் நடிக்க மிகப் பெரிய டைரக்டரான எஸ்.ஜே.சூர்யா ஒப்புக் கொண்டது எனது மகிழ்ச்சி அளித்தது. என்னுடைய வேலையை அவர் பாராட்டியது மறக்க முடியாத தருணம் என்றார் வெங்கட் பிரபு.

    Recommended Video

    Maanaadu Review | Yessa ? Bussa ? | Silambarasan | S J Suryah | Venkat Prabhu | Filmibeat Tamil
    பொருத்தமான எஸ்.ஜே.சூர்யா

    பொருத்தமான எஸ்.ஜே.சூர்யா

    எஸ்.ஜே.சூர்யா இந்த ரோலுக்கு மிக பொருத்தமாக இருந்தார். அவரது நடிப்பு இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. அவருக்கான டயலாக்கை ஆன் தி ஸ்பாட்டில் தான் நான் எழுதினேன். ஆனால் அதில் எந்த மாற்றமும் செய்யாமல் அவர் சிறப்பாக நடித்து கொடுத்தார் என்றார் வெங்கட் பிரபு .

    English summary
    Director Venkat prabhu revealed that Vijay was the first choice for Maanaadu in Abdul kaliq role. meanwhile arvindswamy was the first choice for dhanushkodi character. but delay of maanaadu shooting arvind swamy quit from maanaadu. after that venkat prabhu talk with s.j.suriya.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X