சீனியர் ஹீரோவுக்கு ஹீரோயின் தேடறதுக்குள்ள... கேத்தரின் போனா என்ன? அஞ்சலி இருக்காக, ஸ்ரேயா இருக்காக!
சென்னை: பலவித போராட்டங்களுக்கு பிறகு சீனியர் ஹீரோவுடன் நடிக்க ஹீரோயின் கிடைத்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் சீனியர் ஹீரோ பாலகிருஷ்ணா. ஆக்ஷன் காட்சிகளும் அதிரடி சண்டைக்காட்சிகளும் இவரது படத்தின் பட்டையை கிளப்பும்.
வில்லனை ஓங்கி அடித்தால், ஒன்றரை டன் வெயிட்டெல்லாம் இல்லை. வேற லெவல். அவர் எதிரில் இருக்கிற கம்பத்தில் மோதி, இன்னொரு கம்பத்தில் தட்டி, வேறொரு கம்பத்தில் போய் விழுவார்.

ஓடுகிற ரயிலை
அவ்வளவு பவர் என்பதைக் காட்டுவார்கள். இவரது முந்தைய படங்களில் ஓடுகிற ரயிலையே இவர் நிறுத்தி இருக்கிறார். இவரது பஞ்ச் வசனங்களும் பிரபலம். இந்த காமெடிகளுக்காகவே, மொழி புரிகிறதோ, இல்லையோ, இவர் படத்தை பார்க்க வேற்றுமொழி ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஒதுங்கி விடுவார்கள்
இவர் சீனியர் ஹீரோ என்பதால் இவரது ஒவ்வொரு படத்துக்கும் ஹீரோயின் கிடைப்பது சிக்கலாகவே இருக்கும். எந்த இளம் ஹீரோயினும் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். கால்ஷீட் இல்லை என்று ஒதுங்கி விடுவார்கள். அல்லது தரமாட்டார்கள் என்பதற்காகவே, அதிக சம்பளம் கேட்பார்கள்.

இரண்டு ஹீரோயின்
அப்படித்தான் நடிகை கேத்தரின் தெரசாவும். இவர், தமிழில் கார்த்தி நடித்த மெட்ராஸ், விஷாலின் கதகளி, கணிதன், கதாநாயகன், வந்தா ராஜாவாதான் வருவேன் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இவரிம் பாலகிருஷ்ணா நடிக்க கால்ஷீட் கேட்டனர். பிரபல இயக்குனர் போயபதி ஶ்ரீனு இயக்கும் படம் இது. இதில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கக் கேட்டனர்.
முதலில் இந்தக் கேரக்டரில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டனர். அவர் பிசி என்று மறுத்துவிட்டதால் இவரிடம் பேசினர். இதில் நடிக்க கேத்தரின் தெரசா ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். முந்தைய படங்களில் குறைவான சம்பளம் வாங்கிவிட்டு இந்தப் படத்துக்கு ஒரு கோடி கேட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இதனால் வேறு ஹீரோயினைத் கடந்த சில மாதமாகத் தேடி வந்தனர்.

அஞ்சலி, ஸ்ரேயா
இப்போது நடிகைகள் அஞ்சலியையும் ஸ்ரேயாவையும் படக்குழு ஓப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் அதிக வாய்ப்புகள் இல்லை என்பதால் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் ஸ்ரேயா கிளாமர் ரோலிலும் அஞ்சலி மெயின் ஹீரோயினாகவும் நடிக்க உள்ளனர். பாலகிருஷ்ணா ஜோடியாக, ஏற்கனவே அஞ்சலி, டிக்டேட்டர் படத்தில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











