Valentine's Day memes: வேலையும் இல்லை வேலன்டைனும் இல்ல.. காதலர் தினத்தில் டிரெண்டாகும் கதறல் மீம்ஸ்!
சென்னை: காதலர் தினத்தை ஒரு பக்கம் காதலர்கள் ரொமான்ஸ் மூடில் "உருகி உருகி போனதடி" என ஏகப்பட்ட ஸ்டேட்டஸ்களை வைத்து கொண்டாடி வரும் நிலையில், சிங்கிள் பசங்க காதலி கிடைக்காத விரக்தியில் ஏகப்பட்ட காமெடி மீம்களை போட்டு கதறி வருகின்றனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காலை முதலே "அட வருஷத்தில் ஒருமுறை தான் இந்த காதலர் தினம் வருது.. அட உனக்கும் எனக்கும் தான் இது வருஷம் முழுக்கும் வருது" என சில பூமர் அங்கிள்களும் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்து அலப்பறையை கிளப்பி உள்ளனர்.
காதலர் தினத்தை ட்ரோல் செய்தும் தங்கள் கதறல்களை மீம்களாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் நிலையில், அதில் சில ஜாலியான மீம்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஒரு தடவை கூட: லைஃப்ல ஒரு தடவை கூட வேலன்டைன் செலிபிரேட் பண்ணது இல்லை தேவா என அயன் பட கருணாஸ் சொல்வது போல ஒரு அசத்தலான மீம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

என்ன லவ் பண்ணல: இதுவரைக்கும் எத்தனை லவ் பண்ணிருக்க 4.. அதுல ஒருத்தர் கூட லவ்வர்ஸ் டே கொண்டாடலையா.. இல்லை.. ஏன்?.. நான் அவங்களை லவ் பண்ணியிருக்கேன். ஆனால், அவங்க யாரும் என்னை லவ் பண்ணலையே.. என விவேக் காமெடி டெம்பிளேட்டை போட்டு கதற விட்டு வருகின்றனர்.

வேலையும் இல்லை வேலன்டீனும் இல்லை: வேலையும் இல்லை வேலன்டீனும் இல்லை என பீஸ்ட் பட விஜய் போட்டோவை போட்டு ரைமிங்கில் ஒரு தம்பி போட்டுள்ள மீம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆமாம் அந்த வேலன்டீன் பாதிரியார் இல்லைன்னு இவன் ஏன் ஃபீல் பண்றான். வேலன்டீன்னா காதலர் என நினைத்துக் கொண்டானோ? என்று அதற்கு கீழ் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

நம்மள தவிர: தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினிகாந்த் அண்டிராயருடன் நிற்கும் டெம்பிளேட்டை பதிவிட்டு "நம்மள தவிர எல்லாரும் லவ்வர்ஸ் டே கொண்டாடுறாங்க போல" என இந்த நெட்டிசன் மீம் போட்டுள்ளார்.

ராசி பலன்: பிப்ரவரி 14ம் தேதி ராசி பலனை பார்த்தால் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் இன்னைக்கு லவ் புரபோஸலே பண்ண முடியாது போல, மேஷத்துக்கு தடங்கல், மிதுனத்துக்கு சலனம், துலாம் ராசிக்கு பயம் மற்றும் தனுசு ராசிக்கு அலைச்சல் என போட்டிருக்கே என ராசி பலன் மீமும் டிரெண்டாகி வருகிறது.



Click it and Unblock the Notifications











