தமிழ் மாணவர்களை பார்த்து பீதியடைகிறார்கள்... பிரகாஷ்ராஜுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி!
தமிழ் மாணவர்கள் பற்றிய நடிகர் பிரகாஷ்ராஜின் கருத்துக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களை பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் பீதியடைவதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'அகோரி '.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இவர்களுடன் நடிகர் மைம் கோபி, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி. ஜி. முத்தையா, தயாரிப்பாளர் பி டி செல்வகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகை கஸ்தூரி, தமிழ்நாட்டு மாணவர்களை பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் பீதியடைவதாகக் கூறினார்.

திறமைசாலிகள்
இதுகுறித்து அவர் பேசியதாவது, "தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதை இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும் முன்னணியில் இருக்கிறார்கள். ஜெயிக்கிறார்கள்.

பீதியடைகிறார்கள்
தமிழ்நாட்டில் ஒரு மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்றுவிட்டால், இந்தியாவில் அவர் வேறு எங்கு சென்றாலும் ஜெயித்துவிடுவார்கள். அதனால் தான் கன்னட மாநிலத்தவர்கள் உள்பட பலரும் நம் மாணவர்களை பார்த்து பீதியடைகிறார்கள்.

பேய் படம்
இந்தத் திரைப்படத்திலும் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். படத்தின் டிரைலர் டீசர் எல்லாம் பார்த்துவிட்டுப் பிடித்துப் போய் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இப்போதெல்லாம் பேய்ப் படம் ரசிக்கிற மாதிரி இருந்தால் மக்கள் ஆதரவு தருகிறார்கள்.

காஞ்சனா போல
பேய்ப்படம் காமெடியாக இருப்பதைப்போல் வந்தால் மக்கள் மிகவும் ரசிக்கிறார்கள். காஞ்சனா இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அகோரியும் அடுத்த காஞ்சனாவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கிராபிக்ஸ் காட்சிகள்
கிராபிக்ஸ் காட்சிகளை பார்க்கும்போது பாகுபலிக்கு நிகரான காட்சிகளை உணர்ந்தேன்.ஏனென்றால் இந்த படத்தின் டிரைலர் டீசர் எல்லாம் பார்த்த நம்பிக்கையில் சொல்கிறேன். அகோரி பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்" இவ்வாறு கஸ்தூரி பேசினார்.


Click it and Unblock the Notifications











