OG Public Review: செகண்ட் ஹாஃப்ல தூங்கிட்டேன்.. தெலுங்கு குட் பேட் அக்லி.. ஓஜி பப்ளிக் விமர்சனம்!

சென்னை: பிரபாஸை வைத்து சாஹோ படத்தை இயக்கிய இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், ஹிம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள "They Call Him OG" படம் நேற்று இரவு உலகம் முழுவதும் வெளியானது. பவன் கல்யாண் படத்தை பெரும் எதிர்பார்ப்புடன் முதல் நாளே நள்ளிரவு காட்சியை கூட விடாமல் தியேட்டருக்குச் சென்று பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாதியில் தூங்கி விட்டதாக கடுமையான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள் படங்கள் எல்லாம் தொடர்ந்து டிக்கெட் பிரஷர் பில்டப் செய்யப்பட்டு வெளியாகிறது. ஆனால், முதல் ஷோவிலேயே அப்படி அடித்து பிடித்துக் கொண்டு படத்தை பார்க்கும் ஹார்ட் கோர் ரசிகர்களே படத்தை கழுவி ஊற்றும் அளவுக்குத்தான் டாப் ஹீரோக்கள் படங்களை கொடுத்து வருகின்றனர்.

They Call Him OG Public Review in Tamil Pawan Kalyan movie gets mixed reviews

ஹரி ஹர வீர மல்லு படம் பல்பு வாங்கிய பின்னரும் எப்படி முதல் டிக்கெட்டை ஒரு லட்சம் எல்லாம் கொடுத்து வாங்குறாங்க என்கிற ட்ரோல்கள் பரவிய நிலையில், ஓஜி திரைப்படமும் சொதப்பி விட்டது என டோலிவுட்டில் பவன் கல்யாண் ஹேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் பக்கா மாஸ்: ஓஜி படத்தை நள்ளிரவில் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் தலையில் ஓஜி என கட்டிக் கொண்டு தியேட்டர்களை தெறிக்கவிட்டனர். பவர் ஸ்டார் பவன் கல்யாண் பக்கா மாஸ் என்றும் படம் 1000 கோடி அடிப்பது கன்ஃபார்ம் என்றும் உற்சாகமாக பேசினர். ஒரு சீன் கூட போர் அடிக்கவில்லை என்றும் வேறலெவல் ஹைப்ல படம் இருக்கு என்றும் கூறினர்.

தெலுங்கு குட் பேட் அக்லி: ஏகேவுக்கு எப்படி ஒரு குட் பேட் அக்லி படமோ அதே போல பிகேக்கு இந்த ஓஜி படம். டாட்டூ சீன் முதல் ஏகப்பட்ட காட்சிகள் அப்படியே குட் பேட் அக்லி படத்தை தெலுங்கில் பார்த்தது போலவே இருந்தது. படத்தை பவன் கல்யாண் ரசிகர்களாக இருந்தால் ஒருமுறை பார்க்கலாம். ஃபேன்ஸ் சர்வீஸ் பக்காவாக வழங்கப்பட்டுள்ளது என ஒரு ரசிகர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்துள்ளார்.

தூங்கிட்டேன்: ஓஜின்னா ஒரிஜினல் கேங்ஸ்டர் என நினைத்துக் கொண்டு படத்தை பார்க்க வந்தேன். ஆனால், இந்த படத்தில் ஒண்ணுமே இல்லை. 2வது பாதியில் அப்படியே டயார்ட்டாகி தூங்கிட்டேன். பாத்ரூம் போன என் ஃபிரெண்டு அங்கேயே படுத்து தூங்கிட்டான் என இன்னொரு ரசிகர் அதிகாலை விமர்சனத்திலேயே கலாய்த்துள்ளார்.

பெருசா எதிர்பார்த்து போகாதீங்க: பவன் கல்யாணின் ஓஜி படத்தை ரொம்ப பெரிய எக்ஸ்பெக்டேஷன் உடன் எல்லாம் எதிர்பார்த்து போகாதீங்க. ஜாலியாக ஒரு மசாலா படத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் போய் படத்தை பார்க்கலாம். பவன் கல்யாண் நடிப்பு நல்லா இருக்கு, பில்டப் காட்சியெல்லாம், எக்கச்சக்கமாக இருக்கு, விஷுவல்ஸ் ரொம்பவே ஃபிரெஷ்ஷாக இருக்கு, மத்தபதி கதை எல்லாம் பழைய கதை தான் என இன்னொரு ரசிகர் விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X