Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இவர் முன் நடிக்கும் போது எனக்கும் ஆப்பிள் பாக்ஸ் போட்டார்கள் சிவகார்த்திகேயன் சொன்ன அந்த நடிகர் யார்
சென்னை: தமிழக சினிமாவின் மிக முக்கிய நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள "டாக்டர்" திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது.
Recommended Video
இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்துள்ளார். உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து சமீபத்தில் பேசினர் .
மாநாடு படத்தின் வெற்றிக்கு வாழ்த்திய டாக்டர் ஹீரோ
இந்த படத்தில் நடித்த நடிகர் ரெடின் பேசியதாவது... இந்தப்படம் மிக கலகலப்பாக இருந்தது. நான் நடித்த காட்சிகள் நிர்மல் கட் பண்ணிவிடுவாரோ என்ற பயம் இருந்தது. நெல்சன் என்னை வித்தியாசமாக காட்டியிருக்கிறார். படம் முழுக்க பிரமாண்ட செட் போட்டு தான் படம் எடுத்திருக்கிறோம்.குறிப்பாக ஷாப்பிங் செய்யும் பெரிய பில்டிங்ஸ் பிரமிக்க வைக்கும் பாருங்கள் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் .
டி வி புகழ் அர்ச்சனா
இந்த மகிழ்ச்சியை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. எனக்கும் என் மகளுக்கும் ஒரு சேஃபான உணர்வை தந்தார்கள். இந்தப்படத்தில் ஒரு குடும்பமாக தான் வேலை பார்த்தோம் மிக அழகான படமாக, அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் போய் படம் பாருங்கள் நன்றி என்று கூறினார் .
வினய் கனவு நிறைவேறியது
நெல்சன், சிவா உங்கள் இருவருக்கும் நன்றி. இந்த 15 வருடத்தில் 15 படங்கள் பன்ணியிருக்கிறேன். அனைவருடனும் இன்றும் நல்ல உறவு இருக்கிறது. இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு கனவு நிறைவேறியது போலவே இருந்தது. இந்தப்படம் முழுதுமே ஒரு இனிமையான பயணமாக இருந்தது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறேன் என்று சொன்னது மட்டும் அல்லாமல் சிவகார்த்திகேயனுடன் தனது அம்மாவை வீடியோ கால் மூலம் பேச வைத்து மகிழ்ந்தார் நடிகர் வினய்
உண்மையிலும் அண்ணாவாக
நாயகி பிரியங்கா அருள் மோகன் பேசியதாவது ....இப்படம் எனக்கு கிடைத்ததை ஆசிர்வாதமாகத்தான் பார்க்கிறேன். என்னுடைய அறிமுக படமே பெரிய படமாக கிடைத்தது மகிழ்ச்சி. SK நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என வளர்ந்துகொண்டே போகிறார் அவருக்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. அனிருத் இசை அட்டாகாசமாக இருகிறது. அருண் எனக்கு அண்ணாவாக நடித்தார் உண்மையிலும் அண்ணாவாக இருந்தார். இப்படம் மிகப்பெரிய புகழை பெற்று தந்திருக்கிறது. மிகப்பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது. படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்புவுதாக சொல்லி மகிழ்ச்சி தெரிவித்தார் .
மிகப்பெரும் வருத்தம்
இயக்குநர் நெல்சன் பேசியதாவது....முதலில் சிவகார்த்திகேயன் வழக்கமாக அவரது படங்கள் போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவரிடம் பேசி தான் இப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். அவரிடம் இரண்டு ஐடியா சொன்னேன் இரண்டுமே நல்லாருக்கு நீங்களே முடிவு பண்ணுங்கள் என்றார். என் கடமை அதிகமாகிவிட்டது. படம் எடுக்க ஆரம்பித்த இரண்டு வாரத்தில் இது நன்றாக வந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. படம் நினைத்தது போலவே ஒரு நல்ல படமாக வந்துள்ளது. சிவகார்த்திகேயனே படத்தயாரிப்பாளர் என்பதால், அது எனக்கு உதவியாக இருந்தது. என்னை கேள்வி கேட்காமல் எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. விஜய் கார்த்திக் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் நினைத்ததை கொண்டு வந்து விடுவார். முழுப்படத்தையும் எடிட் பண்ணிதற்குப்புறம், எனக்கே தெரியாமல் எடிட் செய்துவிட்டார் நிர்மல். அந்தளவு படத்துடன் ஒன்றியிருப்பார். ப்ரியங்கா அவரது முழுத்திறமை இந்தப்படத்தில் வெளிப்படவில்லை, அவருடன் மீண்டும் படங்கள் செய்வேன். வினய் பார்த்து பழகும் போது அப்பாவியாக இருந்தார் ஆனால் படத்தில் வில்லனாக அசத்தியுள்ளார். அருணை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவரை எல்லாப்படத்திலும் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன் அவர் இல்லாதது மிகப்பெரும் வருத்தம். அனிருத்தை வைத்து தான் திரைக்கதையே எழுதுவேன் அவர் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படமும் நினைத்தது போல அழகாக வந்திருக்கிறது. படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லி எதிர்பார்ப்பை கூட்டினார் நெல்சன் .
சிவகார்த்திகேயன் நின்ற ஆப்பிள் பாக்ஸ்
இரண்டு வருடங்கள் கழித்து அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன் தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாக இருந்தது. ஆனால் ஓ பேபி பாடல் கொஞ்சம் கஷ்டமாக பயமாக இருந்தது. அதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மக்களுக்கு பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு டயாலாக்கே இல்லை. மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான். எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் படத்தில் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் நெல்சன் எப்படி என்னை இப்படி யோசித்தார் என்று தோன்றியது. வினய் உன்னாலே உன்னாலே படம் பார்த்ததில் இருந்து பிடிக்கும். நான் உயரமாக இருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன் ஆனால் வினய் முன்னால் நடிக்கும் போது எனக்கே ஆப்பிள் பாக்ஸ் போட்டு தான் நின்றேன். மனுஷன் மிகப்பெரிய உயரமாக இருந்தார். அவரது குரலும் பாடியும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப்பெரிய உதவியாக இருந்தது. தமிழ் தெரிந்த நடிகையுடன் நடிக்கும் போது, படப்பிடிப்பிலேயே காட்சி எப்படி வரும் என்ற தெளிவு இருக்கும். ரெடின், யோகிபாபு இப்படத்தில் கலக்கியுள்ளனர். அருண் ப்ரோ அவர் இப்படத்தில் செய்தது காலாகாலத்திற்கும் பேசப்படும், அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்தில் அட்டகாசமாக இருக்கும், தியேட்டரில் பார்த்தால் உங்களுக்கு புரியும். அனிருத் தான் இந்தப்படத்தை அறிவித்ததிலிருந்தே, இதற்கு அடையாளமாக இருந்தவரே அவர்தான். இந்தப்படம் நடித்த அனைவருக்குமே முக்கியமான படமாக இருக்கும். இந்தப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் என்று ரசிகர்களை நம்பி சிரித்த முகத்துடன் பேசி முடித்தார் .
அக்டோபர் 9ஆம் தேதி
நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள "டாக்டர்" திரைப்படத்தை , சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் செய்துள்ளார். R. நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார். அக்டோபர் 9 ந்தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.