''எவ்ளோ வேணும்னாலும் பணம் தரோம், அஞ்சலிய தேடிக் கண்டுபிடிக்கணும்''!
சென்னை: அஞ்சலி காணாமல் போனதும் போனார், அவரை கங்கணம் கட்டிக் கொண்டு குரூப், குரூப்பாக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையை நிரூபிக்கிறேன் என்றும், அஞ்சலிக்கு நோய் என்றும் கூறிக்கொண்டு சித்தி போலீஸ் ஸ்டேஷனில் தவமாய் கிடக்கிறார். டைரக்டர் களஞ்சியமோ ' நா என்னயா செஞ்சேன். அஞ்சலிய அறிமுகப்படுத்தினது ஒரு குத்தமா?' என்று கதறிக் கொண்டு இருக்கிறார்.
ஒசாமா போல் இருக்கும் இடத்தைச் சொல்லாமல், போனில் மட்டும் அவ்வப்போது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் அஞ்சலி.

காத்திருக்கும் படங்கள்...
அஞ்சலி முடித்துக் கொடுப்பதற்காக இரண்டு படங்கள் வரிசைக் கட்டிக் கொண்டு காத்திருக்கின்றன.

நா என்ன ஏடிஎம்மா?
தன்னை பணம் காய்க்கும் மரமாக தனது சித்தி பயன்படுத்தி வந்ததாக அஞ்சலி கூறியுள்ளார்.

களஞ்சியத்துடன் கூட்டு...
களஞ்சியத்துடன் கூட்டு சேர்ந்து தனது வாழ்க்கையை சித்தி சீரழித்து விட்டதாக குறை கூறியுள்ளார்.

பை..பை...சென்னை...
தான் திரும்பி சென்னை வரப்போவதில்லை என்றும், நான் யாருடன் ஓடிப்போகவும் இல்லை என மறுத்துள்ளார் அஞ்சலி.

ஹேபியஸ் கார்பஸ்...
எவ்ளோ வேணும்னாலும் பணம் தரோம், அஞ்சலிய தேடிக் கண்டுபிடிக்கணும் என்று ஹேபியஸ் கார்பஸ் தாக்கல் செய்ய ஆலோசிச்சுட்டு வாராங்களாம் பாரதிதேவி.


Click it and Unblock the Notifications











