Exclusive: சேரன் சாருக்கே கிடைக்கலை.. 100 நாளே இருந்திருந்தாலும் எனக்கெல்லாம் சான்சே இல்ல : மதுமிதா

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்திருந்தால் கூட, தனக்கு டைட்டில் கிடைத்திருக்காது என்கிறார் மதுமிதா.

Recommended Video

Madhumitha Against Vijay Tv : விஜய் டிவி செய்த காரியத்தை கண்டித்துவீடியோ வெளியிட்ட மது

சென்னை: பிக் பாஸ் வீட்டில் நூறு நாட்கள் தாக்குப் பிடித்திருந்தால் கூட, நிச்சயம் எனக்கு பட்டம் கிடைக்க விட்டிருக்க மாட்டார்கள் என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3யில் ஆரம்பம் முதலே டைட்டிலை வெல்லும் தகுதி வாய்ந்த போட்டியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர் நடிகை மதுமிதா. ஆனால், சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட சண்டையால் பாதியிலேயே அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

கமலுமே கூட, 'தட்டில் வைத்து தரப்பட்ட வெற்றியை தட்டி விட்டு விட்டீர்களே' என தனது ஆதங்கத்தை மதுவிடமே பதிவு செய்திருந்தார். அந்தளவுக்கு மதுவின் வெளியேற்றம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஒருவேளை அந்த மோதல் சம்பவம் நடைபெறாமல் இருந்திருந்தால், மது இம்முறை டைட்டில் வின்னர் ஆகியிருப்பார் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. சரி, இதே எண்ணம் மதுவிடமும் உள்ளதா என்பது பற்றி அவரிடம் பேசினோம்.

இமேஜ் உயர்ந்திருக்கிறது

இமேஜ் உயர்ந்திருக்கிறது

"பிக் பாஸ் நிகழ்ச்சியினால் எனது இமேஜ்க்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. திரைத்துறையை பொறுத்த வரை என்னுடைய திறமை மற்றும் குணம் அறிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமே இல்லை. இன்னும் சொல்லப்போனாமல், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனது இமேஜ் இன்னும் உயர்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அறிவுரை

அறிவுரை

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், நிறைய இயக்குனர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என்னை மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என அறிவுரை சொன்னார்கள். நான் தான் டைட்டில் வின்னர் என அவர்கள் நினைத்ததார்களாம்.

சான்சே இல்லை

சான்சே இல்லை

ஒருவேளை நான் உள்ளே இருந்திருந்தாலும், டைட்டில் வின்னராகி இருப்பேனா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் மிகவும் நேர்மையாக விளையாடிய சேரன் சாரே வெளியே வந்துவிட்டாரே. அவரை மாதிரி தான் நானும் நேர்மையாக விளையாடினேன். பார்வையாளர்களுக்கு அது நன்றாக தெரியும். அப்புறம் என்னை எப்படி டைட்டில் வின்னராக விட்டிருப்பார்கள். நிச்சயமாக அது நடந்திருக்காது.

என் ஆசை

என் ஆசை

இப்போது நான் மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன். ஜி.வி.பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடிக்கிறேன். அதேபோல் சக்தி சிதம்பரம் இயக்கும் பேய் மாமா படத்திலும் நடிக்கிறேன். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என நினைத்து உழைத்து கொண்டிருக்கிறேன். மக்கள் மனதில் நிற்கக் கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை", என மதுமிதா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X