பிறந்த நாள் கொண்டாடிய தியாகராஜன்... சரோஜாதேவி வாழ்த்து!

By Shankar

நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளர் தியாகராஜன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

அவருக்கு மூத்த நடிகைகள் சரோஜா தேவி, அம்பிகா, நளினி உள்பட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான பிரசாந்த் கோல்ட் டவர்சில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது.

அலைகள் ஓய்வதில்லை

அலைகள் ஓய்வதில்லை

அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் நடிகராக அறிமுகமானார் தியாகராஜன். மலையூர் மம்பட்டியான் படத்தில் நாயகனாக நடித்து பெரும் வெற்றிப் பெற்றார். தொடர்ந்து கொம்பேறி மூக்கன், நல்ல நாள், நீங்கள் கேட்டவை, எரிமலை, நெருப்புக்குள் ஈரம், தீச்சட்டி கோவிந்தன், காவல் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

எண்பதுகளில் ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தியாகரான். பாயும் புலி, ஜான் ஜானி ஜனார்தன் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் அடைக்கலம் என்ற படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

மகனுக்காக

மகனுக்காக

மகன் பிரசாந்த் பரபரப்பாக நடிக்க ஆரம்பித்ததும் தான் நடிப்பதை நிறுத்திக் கொண்டு மகனை முன் நிறுத்துவதிலேயே முனைப்பு காட்டினார். பிரசாந்தை வைத்து ஆணழகன், ஷாக், மம்பட்டியான், பொன்னர் சங்கர் போன்ற படங்களை தயாரித்து இயக்கினார்.

புதிய படம்

புதிய படம்

இப்போதும் பிரசாந்தை வைத்து புதிய படங்களை தயாரிக்கவும், இயக்கவும் திட்டமிட்டுள்ளார் தியாகராஜன்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இந்த நிலையில் இன்று தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள பிரசாந்த் கோல்ட் டவர்ஸில் இன்று கொண்டாடினார் தியாகராஜன். அவருக்கு மூத்த நடிகை சரோஜா தேவி கேக் ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறினார். நடிகைகள் அம்பிகா, நளினி, பூர்ணிமா, நடிகர் நாசர், இயக்குநர் பாக்யராஜ், ராஜகுமாரன், சின்னி ஜெயந்த் உள்பட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த மில்லினியத்தின் சிறந்த தந்தை

இந்த மில்லினியத்தின் சிறந்த தந்தை

தியாகராஜனுக்கு இந்த மில்லினியத்தின் சிறந்த தந்தை என்ற விருதினை வழங்கி பாராட்டினார் ஜோய் ஆலூக்காஸ் சேர்மன் ஜோய்.

வாழ்த்த வந்த அனைவரையும் வரவேற்றார் நடிகர் பிரசாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X