டாப் ஸ்டார் பிரசாந்த் பர்த்டே.. 1.5 கோடிக்கு அப்பா தியாகராஜன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்.. வேற லெவல்!

சென்னை: 1973ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் பிறந்து வளர்ந்த பிரசாந்த் தனது 51வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். டாப் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் பிரசாந்த் என்றுமே தனது செல்ல மகன் என நினைத்து பிரசாந்துக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வரும் தந்தை தியாகராஜன் பிறந்தநாள் அதுவுமா காஸ்ட்லியான கிஃப்ட் ஒன்றை வழங்கி அசத்தி உள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரசாந்த் அந்த படத்தை தேர்வு செய்தது ஏன் என்பதற்கும் பதிலளித்து ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

Thiagarajan gifts 1 5 crore costly BMW car to to his son Prashanth

பிரசாந்துக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக இயக்குநரும் நடிகருமான அவரது தந்தை தியாகாராஜன் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி பர்த்டேவை ஹேப்பியாக்கி உள்ளார்.

51வது பிறந்தநாள்: இயக்குநர் தியாகராஜன் மற்றும் சாந்தி தியாகராஜனுக்கு மகனாக ஏப்ரல் 6ம் தேதி 1973ம் ஆண்டு பிறந்தவர் தான் பிரசாந்த். 1990ம் ஆண்டு இயக்குநர் ராதா பாரதி இயக்கத்தில் வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த் 90ஸ் கிட்ஸ்களின் டாப் ஸ்டாராகவே மாறினார். மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா, ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் என பல முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், வின்னர் என பிரசாந்த் நடித்த பல படங்களை இப்போது பார்த்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

Thiagarajan gifts 1 5 crore costly BMW car to to his son Prashanth

திருமணத்தால் நேர்ந்த கொடுமை: நடிகர் பிரசாந்த் டாப் ஸ்டாராக தமிழ் சினிமாவையே கலக்கிக் கொண்டிருந்த நிலையில், 2005ம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் ஆனதில் இருந்தே பிரசாந்த் வாழ்க்கை சறுக்க ஆரம்பித்தது. ஏகப்பட்ட சண்டை வீட்டில் நடந்து வந்த நிலையில், 2009ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில் தான் பிரசாந்த்தின் சினிமா வாழ்க்கையும் சரிந்து விட்டது என அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால், தற்போது அதையெல்லாம் கடந்து கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.

சொகுசு கார் பரிசு: நடிகர் பிரசாந்த் நடிப்பில் விரைவில் அந்தகன் வெளியாக காத்திருக்கிறது. அடுத்து இந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் பிரசாந்த் நடித்து வரும் கோட் படமும் ரிலீஸ் ஆகப் போகிறது. இந்நிலையில், 51வது பிறந்தநாளை கொண்டாடிய பிரசாந்துக்கு சர்ப்ரைஸாக அப்பா தியாகராஜன் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளை நிற BMW X7 சீரிஸ் காரை பரிசாக வழங்கி உள்ளார். அந்த காரை எடுத்து ஓட்டிக் கொண்டே யூடியூப் சேனல் ஒன்றுக்கு பிரசாந்த் பேட்டியளித்துள்ளார்.

விஜய் முதல் யோகி பாபு வரை வாழ்த்து: பிரசாந்தின் பிறந்தநாளுக்கு முதல் ஆளாக யோகி பாபு போன் செய்து வாழ்த்தினார் என பிரசாந்த் கூறினார். நடிகர் சமுத்திரகனி பிரத்யேகமாக ஒரு வீடியோவை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். மேலும், தளபதி விஜய், சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் வாழ்த்தியதாக பிரசாந்த் தனது பேட்டியில் கார் ஓட்டிக் கொண்டே கூறியுள்ளார். பல கதைகளை கேட்டு வருவதாகவும் விரைவில் அடுத்தடுத்த பட அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X