தலயோட 62வது படத்தை இவர்தான் டைரக்ட் செய்யப்போறாரா? கோலிவுட்டில் பரபர டாக்!

சென்னை : தல அஜித்தின் 61வது படம் வலிமை. இந்தப் படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளது.

தற்போது எல்லையில் தன்னுடைய பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார் அஜித்.

இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் தற்போது கோலிவுட்டில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் தல என தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருபவர். தற்போது அவரது நடிப்பில் வலிமை படம் உருவாகியுள்ளது. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை படம்

வலிமை படம்

போனி கபூரின் தயாரிப்பில் எச் வினோத் டைரக்ட் செய்துள்ள வலிமை படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு காணப்படுகிறது. இதையெல்லாம் தனது கவனத்தில் கொள்ளாமல் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு எல்லையை ஒட்டிய இடங்களில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் அஜித்.

ட்ரெண்டாகும் அஜித்தின் படங்கள்

ட்ரெண்டாகும் அஜித்தின் படங்கள்

இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித் பாலைவனப் பகுதியில் பைக்கின் நிழவில் ஓய்வெடுக்கும் புகைப்படம் அதிகமான லைக்சை பெற்றது. போனி கபூரும் சில படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு

அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகளவில் காணப்படுகிறது. அவரது பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் அஜித்தின் 62வது படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மற்றொரு தகவலும் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

 இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படங்கள் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சமீபத்தில் அந்த கேரக்டருக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

Recommended Video

உயர்தட்டு மக்களுக்கு மட்டும் சினிமாக்கல்வி கிடைக்கிறது | Director Vetrimaaran | Filmibeat Tamil
சிறப்பான கூட்டணி

சிறப்பான கூட்டணி

தான் வடிவமைக்கும் கேரக்டர்களை திரையில் சிறப்பாக கொண்டுவரும் திறமையை அதிகமாக பெற்றுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. நடிகர் அஜித்தும் தன்னுடைய டைரக்டர் கேட்கும் கேரக்டர்களை சிறப்பாக செய்து முடிப்பார். இந்நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணியும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

விரைவில் அறிவிப்பு?

விரைவில் அறிவிப்பு?

இவர்கள் இருவரும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். இந்தக் கூட்டணியின் படத்தை தயாரிக்கவுள்ள நிறுவனம் மற்றும் நாயகி உள்ளிட்ட தகவல்களையும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X