TK ரசிகர்களே ஓடி வாங்க.. தியாகராஜா குமாரராஜாவுடன் இணைந்த விஜய் சேதுபதி.. அட்டகாசமான டைட்டிலா இருக்கே!

சென்னை: தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குனர்கள் மட்டுமே தங்களுக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். அது அவர்களின் திரைப் படங்களைக் கடந்து, அவர்களின் பேட்டிகள், பேச்சுக்கள், சமூகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருவது உள்ளிட்ட அனைத்திற்கும் என்று அனைத்திற்கும் அந்த ரசிகர்கள் பட்டாளம் ரியாக்ட் செய்து வருகிறார்கள். அப்படியான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள இயக்குநர், தியாகராஜா குமாரராஜா.

தமிழ் சினிமாவில் அவர் ஒரு தனித்துவமான இயக்குநர். கடந்த 2011ஆம் ஆண்டு இவர் ஆரண்ய காண்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது வாங்கினார். தனது முதல் படத்தை நாயர் வகை படமாக உருவாக்கினார். இது ஆங்கிலப் பட உலகில், கடந்த 1940 ஆம் ஆண்டுகளில் வெளியான ஒருவகைப் பட பாணி ஆகும்.

குற்றப் பின்னணி, ஊழல் நிறைந்த உலகம், எதற்கும் துணியும் நாயகன், வஞ்சகம் செய்யும் பெண் என இப்படியான திரைக்கதை அமைப்புதான் நாயர் பட பாணியின் அங்கங்கள். இதில் அவர் டிஜிட்டல் கலரிங்கைச் சேர்த்ததால், அது நியோ நாயர் திரைப்பட பாணி என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, காயத்ரி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படமான சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார். இந்த படம் உலக அளவில் கவனம் பெற்றது.

Thiagarajan Kumararaja announces next film Pocket Novel starring Vijay Sethupathi and Malavika Mohanan

பாக்கெட் நாவல்: சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் இவரது இயக்கத்தில் படம் உருவாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபது கதாநாயகனாகவும், மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் கிஷோர், ராஜ் பி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் படம் உருவாக உள்ள அறிவிப்பு மொத்த ரசிகர்கள் பட்டாளத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்திற்கு பாக்கெட் நாவல் என்று பெயரிட்டுள்ளனர்.

மார்டன் லவ்: சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பின்னர் இவர் மாட்ரன் லவ் சென்னை ஆந்தாலஜி படத்தில் நினைவோ ஒரு பறவை என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X