பல விருதுகளை பெற்ற ஆரண்ய காண்டம் இந்தியில் ரீமேக்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் !

சென்னை : இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் தான் ஆரண்ய காண்டம்.

இத்திரைப்படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லீட் ரோலில்

லீட் ரோலில்

2011ம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ்.பிபி சரண் தயாரித்தார். இதில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தனர்.

இரண்டு தேசிய விருது

இரண்டு தேசிய விருது

இத்திரைப்படம் நியூயார்க்கில் நடந்த South Asian internation film festival-ல் Grand Jury பரிசை வென்றது. இதுவரை வேறு எந்த தமிழ் திரைப்படமும் உலக அரங்கில், உலக திரைப்பட விழாக்களில் Grand Jury பரிசை வென்றதாக தெரியவில்லை. மேலும் இப்படம் சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதை வென்றது.

இந்தி ரீமேக்

இந்தி ரீமேக்

ஆரண்ய காண்டம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆனா நிலையில், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகை, நடிகர் விவரமும் விரைவில் வெளியாக உள்ளது.

விஜய்சேதுபதிக்கு தேசியவிருது

விஜய்சேதுபதிக்கு தேசியவிருது

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா ஓரம்போ திரைப்படத்தில் வசனகர்த்தாவாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும், 2019ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: thiagarajan hindi remake
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X