தியாகராஜன் குமாரராஜாவின் 3வது படம் குறித்து வெளியான புதிய தகவல்!
சென்னை: தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.
இரண்டு படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் நின்று பேசும் படியாக இயக்கி ரசிகர்கள் மனதில் நின்றுவிட்டார்.
தியாகராஜன் குமாரராஜாவின் மூன்றாவது படம் குறித்த தகவல்கள் தற்போது வர தொடங்கியுள்ளன.
Recommended Video

குவிந்த விருதுகள்
2011ல் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படமாக வெளியான ஆரண்ய காண்டம் வசூல் ரீதியாக நஷ்டமடைந்தாலும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. தாமதமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படம் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்றது.

தேசிய விருது
2019ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படமாக சூப்பர் டீலக்ஸ் வெளியானது. இந்த முறை ரசிகர்கள் சுதாரித்து கொண்டு படத்தை வேற லெவலில் வெற்றி பெற செய்தனர். இந்த திரைப்படம் பல விருதுகளை குவித்தது. விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்து தேசிய விருதை வென்றார்.

வித்யாசமான இயக்குனர்
தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் பெரிய இடைவெளி இருந்தது. ரசிகர்களை எதிர்பார்ப்பில் இருக்க வைத்து பொறுமையாக தனக்கு தோன்றும் போது நல்ல கதையை தயார் செய்து படத்தை இயக்குபவர் தியாகராஜன் குமாரராஜா.

சைன்ஸ் பிக்ஷன்
இந்நிலையில் தியாகராஜன் குமாரராஜாவின் மூன்றாவது படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. தியாகராஜன் குமாரராஜாவின் மூன்றாவது படம் சைன்ஸ் பிக்ஷன் கதைகளத்தை கொண்டது எனவும் அதற்கான கதை எழுதும் பணிகள் முடிந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











