Actress Sona: கொள்ளையர்களை நேருக்கு நேர் சந்தித்த நடிகை.. கத்தியை காட்டி மிரட்டிய திருடன்!

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான சோனா, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சோனா வீட்டில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி வீட்டில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து நடிகை சோனா, மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார்

நடிகை சோனா மதுரவாயலில் கிருஷ்ணா நகரில், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மர்ம நபர்கள் இருவர் சோனாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரை எகிறி குதித்து வீட்டிற்குள் வந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து சோனா அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

sona theft home

மர்ம நபர்கள்: இதுகுறித்து சோனா அளித்துள்ள பேட்டியில், நான் வீட்டில் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு இருந்தேன் அப்போது ரொம்ப நேரமாக நாய் குறைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால், நான் வெளியே வந்து பார்த்தேன். அப்போது, கண் முன் அவன் ஏசி யூனிட்டை திருட முயற்சி செய்தான், என்னைப் பார்த்ததும், இடுப்பில் வைத்து இருந்த கத்தியை காட்டி என்னை மிரட்டினான். நான் பயத்தில் கத்தினேன் அப்போது பக்கத்து அப்பார்ட்மென்டில் இருப்பவர்கள் பார்த்துவிட்டு உதவி எதுவும் செய்யாமல் உள்ளே சென்றுவிட்டனர். அப்போது வெளியில் இருந்த ஒருவன், கத்தியை உள்ளேவைடா, அப்புறம் பார்த்துக்கலாம் வா என்று சொன்னான் இதையடுத்து இருவரும் சென்றுவிட்டனர்.

கத்தியை காட்டி மிரட்டினர்: அதன்பின் நான் 100க்கு போன் செய்தேன், உடனே மதுரவாயல் போலீசார் வந்தார்கள், கிரைம் ப்ரான்ச் போலீசார் வந்து என்ன நடந்தது என்று கேட்டார்கள். என் வீட்டில் சிசிடிவி இல்லை. அருகில் இருந்த கடை ஒன்றில் இருந்து அவர்களின் காட்சியை போலீசார் எடுத்துள்ளனர். இதுகுறித்து சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது. இன்று எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறோம். நான் அளித்த புகாரின் அடிப்படையில் கத்தியை காட்டி தப்பி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் என சோனா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

கவர்ச்சி நடிகை: கவர்ச்சி நடிகையான சோனா, அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம், விஜய்யின் ஷாஜகான் படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார். குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து அசத்தி இருப்பார். இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து, திடீரென தெலுங்கு திரையுலகிற்கு சென்றார். அதன்பின் மீண்டும் தமிழக்கு வந்த இவர், சிவப்பதிகாரம், மிருகம் படங்களில் மூலம் தமிழ் திரையுலகிற்கு திரும்பினார். இதில் மிருகம் படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை ரோலில், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X