புது 'தில்லு முல்லு' எடுபடுமா?

By Shankar

32 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்க, பாலச்சந்தர் இயக்கிய படம் தில்லு முல்லு.

ரஜினியின் எவர்கிரீன் க்ளாஸிக் படங்களில் இந்தப் படத்துக்கு முக்கிய இடம் உண்டு. வசூல், தரம், கலைஞர்களின் பங்களிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர் மனங்களைக் கொள்ளை கொண்ட படம் இது.

ரீமேக்

ரீமேக்

இந்தப் படத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தலைமுறைக்கேற்ப ரீமேக் செய்துள்ளனர். எஸ்ஆர்எம் குழுமத்தின் வேந்தர் மூவீஸ் பெரும் விலைக்கு இதன் ரீமேக் உரிமையை பாலச்சந்தரிடமிருந்து பெற்று தயாரித்துள்ளனர். கிட்டத்தட்ட 7.5 கோடி ரூபாய் பட்ஜெட் என்கிறார்கள்.

கோல்மால்...

கோல்மால்...

இந்தப் படத்தின் ஒரிஜினல் வடிவம் இந்தியில் வெளியான கோல்மால். அமோல் பாலேகர் நடிக்க, ஆர்டி பர்மன் இசைக்க பெரும் வெற்றி கண்ட படம். அதைத்தான் உரிமை பெற்று தில்லுமுல்லு ஆக்கினார் கேபி.

தேங்காய் சீனிவாசன் வேடத்தில்...

தேங்காய் சீனிவாசன் வேடத்தில்...

தில்லுமுல்லு படத்தில் ரஜினிக்கு அடுத்து மிக முக்கியமான வேடம் தேங்காய் சீனிவாசனுக்குதான். கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ அவர். படம் முழுக்க ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி எனும் சீரியஸான அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கலக்கியிருப்பார் மனிதர்.

ரீமேக்கில் அந்த வேடத்தை செய்திருப்பவர் பிரகாஷ் ராஜ். தேங்காயை ஜஸ்ட் நெருங்க முடிந்தால் கூட அவருக்கு வெற்றிதான். பார்க்கலாம்!

சௌகார் ஜானகி...

சௌகார் ஜானகி...

மீனாட்சி துரைசாமி என்ற பெயரைக் கேட்டாலே தில்லுமுல்லு படம் தன்னால் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவு அருமையாக நடித்திருப்பார் சௌகார் ஜானகி. ரீமேக்கில் அந்த வேடம் கோவை சரளாவுக்கு.

ராகங்கள் பதினாறு...

ராகங்கள் பதினாறு...

தில்லு முல்லு காமெடிப் படம் என்றாலும், அதில் எம்எஸ்வி இசையில் ஒரு அற்புதமான மெல்லிசைப் பாடலாக 'ராகங்கள் பதினாறு...' இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலை அப்படியே புதிய படத்துக்கும் ரீமேக் செய்திருக்கிறார்கள். கூடவே, படத்தின் டைட்டில் பாடலான தில்லு முல்லுவையும் ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

க்ளைமாக்ஸ் வேறு...

க்ளைமாக்ஸ் வேறு...

இரு படங்களின் கதையும் ஒன்றுதான் என்றாலும், ரீமேக்கில் திரைக்கதையை மொத்தமாக மாற்றியுள்ளனர். க்ளைமாக்ஸையும் மாற்றியுள்ளனர். வாரம் ஒரு முறை பழைய தில்லு முல்லுவைப் பார்த்தவர்கள், இந்த ரீமேக்கை எப்படி ரசிப்பார்கள் என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X