நானும், கணவரும் பிரிய அந்த பெண் பிரபலம் காரணமா?: பிரபல நடிகை விளக்கம்

By Siva

மும்பை: தானும், கணவரும் பிரிய பெண் பிரபலம் ஒருவர் காரணம் என்று வெளியான செய்திகள் குறித்து பாலிவுட் நடிகை தியா மிர்சா விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகை தியா மிர்சா தனது காதல் கணவர் சாஹில் சங்காவை பிரிவதாக கடந்த வியாழக்கிழமை ட்விட்டரில் அறிவித்தார். ஆனால் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அன்று மாலையே தனது கணவரான இயக்குநர் பிரகாஷ் கோவிலமுடியை பிரிவதாக பிரபல சினிமா எழுத்தாளர் கனிகா தில்லன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து கனிகாவுக்கும், சாஹிலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் தான் தியா பிரிந்து செல்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து தியா மிர்சா கூறியிருப்பதாவது,

தியா மிர்சா

தியா மிர்சா

நானும், சாஹிலும் பிரிவது பற்றி சில மீடியாக்கள் வெளியிட்ட செய்தி குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன். பொறுப்பில்லாமல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இதில் மேலும் துரதிர்ஷ்டம் என்னவென்றால் திரைத்துறையை சேர்ந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி அவர்களின் இமேஜ் டேமேஜ் செய்யப்பட்டுள்ளது தான். ஒரு பொய்யான தகவலில் ஒரு பெண்ணின் பெயரை பயன்படுத்தியிருப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.

காரணம்

காரணம்

நானும், கணவரும் பிரிந்துள்ளது குறித்து வெளியான தகவல்களில் சுத்தமாக உண்மை இல்லை. நாங்கள் பிரிய மூன்றாவது நபர் யாரும் காரணம் இல்லை. அதனால் எங்களுக்கு பிரைவசி அளிக்குமாறு மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன். இப்படி நடந்ததற்காக நான் கனிகாவிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தியா.

கனிகா தில்லன்

கனிகா தில்லன்

தியாவின் விளக்கத்தை பார்த்த கனிகா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரொம்ப டீசன்டான நடிகை என்று பெயர் எடுத்துள்ள தியா மிர்சா கனிகா விஷயத்தை கையாண்ட விதமும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இரண்டு செய்திகள் ஒரே நாளில் வெளியானதால் இரண்டையும் தொடர்புபடுத்தி பேசுவதா என்று கனிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜட்ஜ்மென்ட் ஹை கியா

ஜட்ஜ்மென்ட் ஹை கியா

கனிகாவும், பிரகாஷ் கோவிலமுடியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டார்கள். இதை கடந்த வியாழக்கிழமை தான் அவர்கள் உறுதி செய்தனர். பிரிந்துவிட்டாலும் நண்பர்களாக உள்ளதாக பிரகாஷும், கனிகாவும் தெரிவித்துள்ளனர். கங்கனா ரனாவத் நடிப்பில் அண்மையில் வெளியான ஜட்ஜ்மென்டல் ஹை கியா படத்தில் பிரகாஷும், கனிகாவும் சேர்ந்து பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X