நான் எப்டி இந்த வாரம் நாமினேஷன் ஆகல.. சந்தேகத்தில் ஹவுஸ்மேட்ஸை குடையும் ரியோ.. காண்டாகும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுகிறது. நாமினேஷன் நடைபெறும் விவகாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு புரமோக்களில் தெரியவந்தது.
அதன்படி ஆரி, ஷிவானி, ரம்யா மற்றும் ஆஜித் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

கார்டன் ஏரியா
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரியோ, கேபி, சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

உன் பேர சொன்னேனே
அப்போது பேசும் ரியோ, நான் எப்படி இந்த வாரம் நாமினேட் ஆகல என டவுட்டுடனே கேட்கிறார். தொடர்ந்து பேசும் சோம், நான் நாமினேஷன்ல இல்லன்னு சந்தோஷமா வந்துட்டு இருக்கேன், நான் தான் உன் பேர சொன்னேனே என்று கேபி சொன்னதை கிண்டல் செய்கிறார்.

ஃபிரண்ட்ஸ் தானே..
அதற்கு பதில் சொல்லும் கேபி நீ கவலைப்படாத குமாரு.. அடுத்த வாரம் வந்துடுவ என்று கேபி சொல்ல ஒரு வாரம் சந்தோஷமா இரு என்று சோம் சொல்கிறார். அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்ட ரியோ, நீங்கள் எல்லாம் உண்மையிலேயே என் பிரண்ட்ஸ் தானா, இல்ல நான் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கேனா என்று கேட்கிறார்.

கார்னர் செய்கிறாய்
அதனை கேட்ட கேபி, நீங்கள் தவறான மக்களை தேர்வு செய்து விட்டீர்கள், குரூப்பிஸம் பண்றவர்கள் என்றும் கூறினார். சோமும் நீ என்னை கார்னர் செய்கிறாய் என்று கூறுகிறார். அப்போது டேக் இட் என பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து தூக்கி போடுவது போல் போடுகிறார் ரியோ.

ஹேப்பியாக உள்ளனர்
இதன் மூலம் சோம், ரியோ, கேபி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் செம ஹேப்பியாக உள்ளனர் என்று தெரிகிறது.
இந்த புரமோவை பார்த்தவர் இதற்கு பெயர் புரமோவா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











