13 வயது இளம் நடிகை திடீர் மரணம்.. ரகசியமாக உடலை அடக்கம் செய்த குடும்பத்தார்.. கொலை செய்யப்பட்டாரா?

13 வயதே ஆகும் அமெரிக்க நடிகை லாரல் கிரிக்ஸ் காலமானார்.

நியூயார்க்; 13 வயதே ஆகும் அமெரிக்க நடிகை லாரல் கிரிக்சின் திடீர் மரணம் ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் திரைப்படங்கள், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை லாரல் கிரிக்ஸ். 13 வயதே ஆகும் இந்த சிறுமியின் நடிப்பாற்றலை பார்த்து ஸ்கார்லெட் ஜான்சென் உள்ளிட்ட பல பெரிய நட்சத்திரங்களே வியந்து பாராட்டியுள்ளனர்.

Thirteen-year-old actress Laurel Griggs passed away

அமெரிக்காவின் புகழ்பெற்ற பிராட்வே நாடக அரங்கில் பல நாடகங்களில் நடித்துள்ளார் லாரல். தனது 6 வயதில் இருந்து அவர் நடித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி லாரல் கிரிக்ஸ்க்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விஷயத்தை தற்போது தான் அவரது குடும்பத்தினர் தெரியப்படுத்தியுள்ளனர். இதை கேள்விப்பட்டு ஹாலிவுட்டில் சோகம் நிலவுகிறது. லாரல் கிரிக்சின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லாரல் கிரிக்ஸ் மரணமடைந்ததற்கான காரணம் குறித்து தெளிவான விவரங்களை அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்த மறுத்துவிட்டனர். இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒரு நடிகையின் மரணத்தை யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைத்து, அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை அவர் கொலை செய்யப்பட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டிருந்தால் கூட அதனை முறைப்படி அறிவித்திருக்கலாமே என்பதே அவர்களது சந்தேகத்திற்கான காரணம்.

இது பற்றி கிரிக்ஸின் குடும்பத்தார் விளக்கம் அளித்தால் தான் உண்மை வெளியில் வரும்.

More from Filmibeat

Read more about: actress death நடிகை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X