»   »  கீர்த்தி வேண்டாம் காஜல் போதும் ... 'கருடா' திருவின் அதிரடி

கீர்த்தி வேண்டாம் காஜல் போதும் ... 'கருடா' திருவின் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கருடா படத்திற்கு நாங்கள் காஜல் அகர்வாலிடம் மட்டும் தான் பேசி வருகிறோம் என படத்தின் இயக்குநர் திரு தெரிவித்திருக்கிறார்.

Thiru Clarify About Garuda Heroine

விக்ரமின் கருடா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்ததாக செய்திகள் தொடர்ந்து பரவி வந்தன. மேலும் விக்ரமின் வயதைக் காரணம் காட்டி கீர்த்தி நடிக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.

Thiru Clarify About Garuda Heroine

இதனால் விக்ரமின் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வந்தனர்.இந்நிலையில் படத்தின் இயக்குநர் திரு இந்த வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதுகுறித்து "கருடா படத்தில் கீர்த்தி நடிக்க மறுத்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை.இந்தப்படம் தொடர்பாக காஜல் அகர்வாலிடம் மட்டும் தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

English summary
Director Thiru Tweeted "FYI News circulating regarding an actress refused to do #Garuda is completely false.The only actress we approached was Kajal Agarwal".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil