வாவ் சூப்பர்...தனுஷிற்குள் இப்படி ஒரு இசை திறமையா?...பகிரங்கப்படுத்திய பெஸ்டி

சென்னை : கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனது 16வது வயதில் ஹீரோ ஆனவர். இன்று படிப்படியாக வளர்ந்து ஹாலிவுட் வரை சென்று தடம் பதித்துள்ளார்.

Recommended Video

வாவ் சூப்பர்...தனுஷிற்குள் இப்படி ஒரு இசை திறமையா?...பகிரங்கப்படுத்திய பெஸ்டி

40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தனுஷ், தற்போதும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி செம பிஸியாக நடித்து வருகிறார். தொடர்ந்து 3 தோல்விகளுக்கு பிறகு, சமீபத்தில் ரிலீசான திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளார் தனுஷ்.

கர்ணன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 17 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகி உள்ள திருச்சிற்றம்பலம் படம் ரிலீசான 10 நாட்களில் ரூ.59.50 கோடிகளை வசூல் செய்துள்ளது. தொடர்ந்து இதன் வசூல் அதிகரித்து வருவதால் மிக விரைவில் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் டாப் 5 ல் திருச்சிற்றம்பலம்

அமெரிக்காவில் டாப் 5 ல் திருச்சிற்றம்பலம்

இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் 2022 ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் மற்றும் வரவேற்பை பெற்ற டாப் 5 படங்களின் பட்டியலில் திருச்சிற்றம்பலம் இடம்பிடித்துள்ளது.. இந்த பட்டியலில் விக்ரம், பீஸ்ட், டான், வலிமை படங்களைத் தொடர்ந்து 5வது இடத்தில் திருச்சிற்றம்பலம் உள்ளது. விரைவில் 3 வது இடத்திற்கு முன்னேறும் என்றும் சொல்லப்படுகிறது.

வீடியோ வெளியிட்ட பெஸ்டி

வீடியோ வெளியிட்ட பெஸ்டி

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வரும் நிலையில், தனுஷின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் தனுஷின் புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதை வெளியிட்டிருப்பது வேறு யாரும் இல்லை. திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு ஜோடியாகவும், பெஸ்டியாகவும் நடித்துள்ள நித்யா மேனன் தான்.

தனுஷிற்குள் இப்படி ஒரு திறமையா?

தனுஷிற்குள் இப்படி ஒரு திறமையா?

இந்த வீடியோவில் தனுஷ், பியானோவில் மிக அழகாக திருச்சிற்றம்பலம் பாடலை வாசிக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு இசை அமைத்தது அனிருத் என்றாலும், அதே இசையை தனுஷ் மிக அழகாக பியானோவில் இசைத்துள்ளது லைக்குகளை அள்ளி வருகிறது. தனுஷிற்குள் இப்படி ஒரு இசை திறமை இருக்கா? மிகவும் கைதேர்ந்த இசைக் கலைஞரைப் போல் தனுஷ் இசைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இத்தனை நாள் தெரியாம போச்சே?

இத்தனை நாள் தெரியாம போச்சே?

நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர், பாடகர் என பல முகங்களைக் கொண்டவர் தனுஷ். இவர் பாடிய பல பாடல்கள் செம ஹிட் ஆகி உள்ளது. தனுஷ் நல்ல டான்சர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு அழகாக பியானோ வாசிக்கும் அளவிற்கு அவருக்குள் இசை திறமை உள்ளது என யாருக்கும் இத்தனை நாட்கள் தெரியாமல் போய் விட்டதே என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X