திருச்சிற்றம்பலம் ஆடியோ லான்ச்.. வீல் சேரில் வந்த நித்யா மேனன்.. தனுஷ் போட்ட ஆர்டர் அப்படி!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் தனுஷ் மற்றும் அனிருத் ஒரே மேடையில் இசைக் கச்சேரி நடத்த உள்ளனர்.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

திருச்சிற்றம்பலம் ஆடியோ லான்ச்
தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை தற்போது தனியார் கல்லூரியில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. பல திரை பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ள்னர்.

வெற்றிமாறன் பங்கேற்பு
நடிகர் தனுஷின் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவுக்கு பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை, விசாரணை படங்களை கொடுத்த தலை சிறந்த இயக்குநருமான வெற்றிமாறன் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். மேலும், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். தனியாக ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியெல்லாம் வைத்து ஹாலிவுட் புகழ் தனுஷின் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவை சன் பிக்சர்ஸ் அமர்க்களப்படுத்தி வருகிறது.

வீல் சேரில் வந்த நித்யா மேனன்
இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. லேசாக காலில் அடிபட்ட நிலையில், வீல் சேரில் வந்ததாக தெரிவித்தார். தனுஷ் உடன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நித்யா மேனன். அனிருத் இசையில் வெளியான முதல் பாடலான தாய்க் கிழவி பாடலில் தனுஷ் உடன் செம டான்ஸ் போட்ட நித்யா மேனன் இன்று ஆட மாட்டார் என்பது ரசிகர்களை சற்றே ஏமாற்றி உள்ளது.

தனுஷ் போட்ட ஆர்டர்
கால் முடியாத நிலையிலும் ஏன் நிகழ்ச்சிக்கு வந்தீங்க என நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நித்யா மேனன் கேட்க, நீ வந்தே ஆகணும்னு தனுஷ் ஆர்டர் போட்டுட்டார், அதான் வந்தேன். திருச்சிற்றம்பலம் படம் என் மனசுக்கு ரொம்பவே ஃபேவரைட்டான படம். அதனால், தான் இதனை தவிர்க்க வேண்டாம் என நினைத்து வந்தேன் என்றும் கூறியுள்ளார் க்யூட்டான புன்னகையுடன் நித்யா மேனன்.

ரெட்கார்ப்பெட்டில் ராஷி கன்னா
திருச்சிற்றம்பலம் படத்தின் இன்னொரு நாயகியான நடிகை ராஷி கன்னா செம க்யூட்டாக ரெட்கார்ப்பெட்டை அலங்கரித்தார். தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம் என்றும், இந்த படம் குடும்பத்தோடு ஜாலியாக பார்த்து சிரித்து மகிழக் கூடிய ஒரு படம் என்றும் பேசி உள்ளார்.
தனுஷ் படங்கள்
இசை வெளியீட்டு விழா அரங்கத்திற்கு வெளியே நடிகர் தனுஷ் நடித்த ஒட்டுமொத்த படங்களின் பிரத்யேக போஸ்டர்கள் வரிசையாக ஒட்டப்பட்டுள்ளன. அனிருத், தனுஷ், பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் ஏகப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











