பொன்னியின் செல்வனுக்கு கூட இவ்ளோ பில்டப் பண்ணலயே.. திருச்சிற்றம்பலம் வேறலெவல் ஸ்பெஷல் இருக்கும் போல!
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்தவுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது, ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால், தற்போது அப்டேட்டுக்கு ஒரு அப்டேட் வந்திருப்பதை பார்த்து தனுஷ் ரசிகர்களே அப்செட் ஆகி உள்ளனர்.
இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து அப்படி என்ன வித்தியாசமான கதாபாத்திரங்கள் இடம்பெறப் போகிறது என்பதை காண தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

யாரடி நீ மோகினி
இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி படம் இன்னமும் ரசிகர்களுக்கு ஃபேவரைட்டான படம் தான். அதன் பிறகு குட்டி, உத்தமப்புத்திரன் என தொடர்ந்து தனுஷுக்கு தெலுங்கு ரீமேக் படங்களை இயக்கித் தள்ளினார். அதன் பிறகு பல வருடங்களாக இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கி உள்ளார் மித்ரன் ஜவஹர்.

திருச்சிற்றம்பலம் அப்டேட்
சன் பிக்சர்ஸ் நேற்று திடீரென திருச்சிற்றம்பலம் அப்டேட் நாளை வருகிறது என ட்வீட் போட தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இன்று காலை முதலே மிகப்பெரிய அப்டேட் கிடைக்கப் போகிறது என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் இன்னொரு அப்டேட் அறிவிப்பு வெளியாகி சற்றே அப்செட் ஆக்கி உள்ளது.

கேரக்டர் போஸ்டர்
இளையாராஜா போஸ்டரை பார்த்தபடி தனுஷ் திரும்பி நிற்கும் போஸ்டரை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நாளை முதல் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் வெளியாகும் என அறிவித்துள்ளது. நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் பட லுக்கை கூட இன்று காட்டவில்லையே என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

பொன்னியின் செல்வனுக்கு கூட
லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிறந்தநாள் அன்று எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி பொன்னியின் செல்வன் படத்தின் அத்தனை கதாபாத்திரங்களின் போஸ்டர்களையும் ஒன்றாக அள்ளித் தெளித்து விட்டனர். ஆனால், சன் பிக்சர்ஸ் புரமோட் செய்வதில் தாறுமாறாக செயல்படும் என்பதால் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா மற்றும் பிரகாஷ் ராஜ் என ஒவ்வொருவருடைய கேரக்டர் போஸ்டரும் ஒவ்வொரு நாள் சிறப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











