புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட திருச்சிற்றம்பலம் இயக்குநர்... ஏமாற்றத்தில் தனுஷ் ரசிகர்கள்!

சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை தனுஷின் ஃபேவரைட் டைரக்டரான மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியிருந்தார்.

திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து தனுஷ் - மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், மித்ரன் ஆர் ஜவஹர் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த அப்டேட் தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

 தனுஷின் வெற்றிக் கூட்டணி

தனுஷின் வெற்றிக் கூட்டணி

மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணனுக்கு பின்னர் தனுஷின் படங்கள் அனைத்தும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட்டில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தனுஷுக்கு மாஸ் கம்பேக் கொடுத்தது. மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்த இந்தப் படத்தில், தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது.

 மீண்டும் தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ?

மீண்டும் தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ?

திருச்சிற்றம்பலம் படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் தனுஷ் ரொம்பவே ஹேப்பியானார். ஏற்கனவே தனுஷ் - மித்ரன் ஜவஹர் கூட்டணியில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுளன. இதனைத் தொடர்ந்து 4வது முறையாக இந்தக் கூட்டணியில் வெளியான திருச்சிற்றம்பலம் படமும் ஹிட்டானது. இதனால், தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ மீண்டும் ஒரு படத்தில் உடனடியாக இணைவதாக சொல்லப்பட்டது.

 அப்டேட் கொடுத்த மித்ரன் ஜவஹர்

அப்டேட் கொடுத்த மித்ரன் ஜவஹர்

தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பின்னர் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா உடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதனால் தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ மீண்டும் இணையுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக மித்ரன் ஜவஹர் தனது அடுத்த படத்தை மாதவன் நடிப்பில் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

 ஏமாற்றத்தில் தனுஷ் ரசிகர்கள்

ஏமாற்றத்தில் தனுஷ் ரசிகர்கள்

மித்ரன் ஆர் ஜவஹரின் இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றத்தில் உள்ளனர். அடுத்த படம் குறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள மித்ரன் ஜவஹர், திருச்சிற்றம்பலம் படத்தின் ப்ளாக்ஸ் பஸ்டர் ஹிட்டுக்குப் பின்னர் நடிகர் மாதவனுடன் இணைகிறேன். இந்தப் படத்தை Mediaone Global Entertainment தயாரிப்பதாகவும் அறிவித்துள்ளார். மாதவன் முதன்முறையாக இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இந்தப் படம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தபோதிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X