Don't Miss!
- Sports
அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு வீரர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார்!
- News
போதும் இந்த ஆளுநர் பதவி.. ஆளை விடுங்க.. விடுவித்து விடுங்கள்.. மோடியிடம் சொன்ன மகாராஷ்டிரா கவர்னர்
- Finance
வேண்டாம் என அனுப்பிய USA நிறுவனங்கள்.. அமெரிக்காவில் தான் இருப்போம்.. அடம்பிடிக்கும் ஊழியர்கள்!
- Lifestyle
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- Automobiles
கார்களையே தூக்கி சாப்பிடும் வசதி! புதிய ஹோண்டா ஆக்டிவா விலை இவ்ளோதானா! இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டரை பாத்ததே இல்ல!
- Technology
OnePlus Keyboard-ல் இப்படி ஒரு ஸ்பெஷலிட்டியா? இப்போதே வாங்க ரெடியாகும் இந்தியர்கள்.!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
ரசிகர்களை எச்சரித்த திருச்சிற்றம்பலம் பட இயக்குநர்... நன்றி சொன்ன தனுஷ்... திடீர் பரபரப்பு
சென்னை:
தனுஷ்
நடிப்பில்
கடந்த
ஆகஸ்ட்
மாதம்
வெளியான
'திருச்சிற்றம்பலம்'
திரைப்படம்
ரசிகர்களிடம்
நல்ல
வரவேற்பைப்
பெற்றது.
மித்ரன்
ஆர்
ஜவஹர்
இயக்கிய
இந்தப்
படத்தில்
தனுஷுடன்
பாரதிராஜா,
பிரகாஷ்ராஜ்,
நித்யா
மேனன்
உள்ளிட்ட
பலர்
நடித்திருந்தனர்.
இந்நிலையில்,
திருச்சிற்றம்பலம்
இயக்குநர்
மித்ரன்
ஆர்
ஜவஹரின்
டிவிட்டர்
பதிவு
வைரலாகி
வருகிறது.
அதேபோல்,
நடிகர்
தனுஷும்
நன்றி
சொல்லி
பதிவிட்டுள்ள
டிவிட்டர்
போஸ்ட்
ட்ரெண்டிங்கில்
உள்ளது.
வாரிசு
பட
தயாரிப்பாளருடன்
இணையும்
தனுஷ்..
யார்
டைரக்டர்
தெரியுமா?

மெஹா ஹிட்டடித்த திருச்சிற்றம்பலம்
தனுஷ் நடிப்பில் இந்தாண்டு மொத்தம் 5 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட்டில் தி கிரே மேன், இந்தியில் அத்ரங்கி ரே, தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என வெரைட்டி காட்டியுள்ளார் தனுஷ். இதில் திருச்சிறம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தனுஷுடன் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியிருந்தார். பெஸ்ட்டியை பின்னணியாக வைத்து ஃபீல்குட் படமாக உருவாகிருந்தது திருச்சிற்றம்பலம்.

எச்சரிக்கை செய்த இயக்குநர்
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், திருச்சிற்றம்பலம் பட இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், "திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன், வேறு எந்த படமும் பண்ணவில்லை, என் பெயரில் வெளியிலிருந்து வரும் பொய்யான செய்திகளையோ, விளம்பரங்களையோ யாரும் நம்ப வேண்டாம்; விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் டிவிட்டரில் பதிவிடுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி என்ன?
இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹரின் இந்த டிவிட்டர் பதிவு சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகிறது. அவரது படத்தில் நடிக்க ஆடிஷன் நடைபெறுவதாகவோ அல்லது நடிக்க வைக்கிறேன எனக் கூறி, சினிமா ஆசையில் இருப்பவர்களிடம் மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி பணம் பறித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் ரசிகர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக மித்ரன் ஆர் ஜவஹர் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளாராம்.

நன்றி சொன்ன தனுஷ்
மித்ரன் ஆர் ஜவஹரின் டிவிட்டர் பதிவு ட்ரெண்டாகி வரும் நிலையில், தனுஷ் தனது டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதாவது ஒரே ஆண்டில் ஹாலிவுட்டில் தி கிரே மேன், இந்தியில் அத்ரங்கி ரே, தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் தனுஷ். இதனை பாராட்டி பிரபல போபர்ஸ் பத்திரிக்கை தனுஷை டிவிட்டரில் வாழ்த்தியுள்ளது. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள தனுஷ், போபர்ஸ் இதழுக்கும் நன்றி கூறியுள்ளார். தனுஷின் இந்த டிவிட்டர் பதிவை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.