திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர் ரிலீஸ்: தனுஷின் கேரக்டர் கன்ஃபார்மா அதுதான், ஆனா அது என்ன அந்த பலம்?

சென்னை: தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ட்ரெய்லர் அதிரி புதிரியாக வெளியாகியுள்ளது.

இந்த ட்ரெய்லரில் தனுஷின் கேரக்டர் உள்ளிட்ட படத்தின் கதையை யூகிக்கி முடிகிறது.

வரும் 18ம் தேதி திருச்சிற்றம்பலம் படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது வெளியான ட்ரெய்லரை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மரண வெயிட்டிங்கில் தனுஷ் ரசிகர்கள்

மரண வெயிட்டிங்கில் தனுஷ் ரசிகர்கள்

கடைசியாக தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் தான் திரையரங்குகளில் வெளியானது. 2020ல் வெளியான அந்தப் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியிருந்தார்.. அதனைத் தொடர்ந்து தனுஷின் ஜகமே தந்திரம், மாறன், இந்தியில் அத்ரங்கி ரே, ஹாலிவுட்டில் 'தி கிரே மேன்' படங்கள், நேரடியாக ஓடிடியில் வெளியாகின. இதனால் ஏமாற்றத்துடன் இருந்த தனுஷ் ரசிகர்கள், இப்போது பெரிய கொண்டாட்டத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

தெறிக்கவிடும் ட்ரெய்லர்

தெறிக்கவிடும் ட்ரெய்லர்

'யாரடி நீ மோகினி' படத்திற்குப் பிறகு, தனுஷும் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரும் இணைந்துள்ள 'திருச்சிற்றம்பலம்.' படத்தில், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராக்‌ஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஆடியோ ஏற்கனவே ரிலீஸாகிவிட்ட நிலையில், தற்போது ட்ரெய்லர் ரிலீஸாகி, இணையத்தை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

தனுஷின் கேரக்டர் இதுதான்

தனுஷின் கேரக்டர் இதுதான்

தொடக்கத்திலேயே ரகளையான காமெடியுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லரில் தனுஷ் டெலிவரி பாயாக நடித்துள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதுவும் இல்லாமல் அவருக்கு தாத்தாவாக நடித்துள்ள பாரதிராஜாவும் தனுஷும் சேர்ந்து சரக்கு அடிக்கும் காட்சிகள், தரமான சம்பவம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர். அதோடு இருவருக்குமே ஒரே பெயர் தான், அதுதான் 'பலம்', அதாவது 'திருச்சிற்றம்பலம்.'

போலீஸ் அப்பாவாக பிரகாஷ்ராஜ்

போலீஸ் அப்பாவாக பிரகாஷ்ராஜ்

இதில் தனுஷின் அப்பாவாக ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் ஆபிஸராக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவருக்கும் தனுஷுக்கும் இடையிலான காட்சிகள், சஸ்பென்ஸாக உள்ளன. அதேபோல் தனுஷின் நெருங்கிய தோழியாக நடித்துள்ள நித்யாமேனனின் ஷோபனா பாத்திரம் ரசிக்க வைத்துள்ளது. தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா இவர்கள் அடிக்கும் லூட்டி தான் படத்தின் மொத்த கதையும் எனத் தெரிகிறது.

பிரியா பவானி சங்கர், ராக்‌ஷி கண்ணா

பிரியா பவானி சங்கர், ராக்‌ஷி கண்ணா

தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், ராக்‌ஷி கண்ணாவும் நடித்துள்ளனர். இதில் தனுஷ் யாரை காதலிக்கப் போகிறார் என்பதும் ட்வீஸ்ட்டாக உள்ளது. காமெடி, கலட்டா, காதல் ரொமன்ஸ் என போகும் ட்ரெய்லர், திடீரென ஆக்சனுக்குள் பாய்கிறது. தனுஷும் பறந்து பறந்து பொளந்துக் கட்டுகிறார். இதனால், தனுஷ் ரசிகர்களிடம் ட்ரெய்லர் செம்மையாக ரீச் ஆகியுள்ளது.

காத்திருக்கும் திருச்சிற்றம்பலம் திருவிழா

காத்திருக்கும் திருச்சிற்றம்பலம் திருவிழா

தனுஷின் படம் திரையரங்குகளில் வெளியாக 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால், 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு ரசிகர்களிடம் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதனை இன்னும் உசுப்பேற்றிவிடும் வகையில் தற்போது ட்ரெய்லரும் வெளியாகி அதகளம் செய்து வருகிறது. ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும் இந்தப் படம், கண்டிப்பாக தனுஷின் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X