கர்ணன் படத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி.. படக்குழுவினருடன் கொண்டாடிய தனுஷ் !

சென்னை : திருச்சிற்றம்பலம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை நடிகர் தனுஷ் படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் இருக்கிறது.

இறுதியாக இவர் நடித்த ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது தனுஷ் அவர்கள் நானே நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் கடந்த வாரம் வெளியானது. இதில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படமாக இது உருவெடுத்துள்ளதாக திரை விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நல்ல வசூல்

நல்ல வசூல்

இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடியைத் தாண்டியுள்ளது. அதோடு சொந்த மாநிலத்தில் அதிக வசூல் செய்த தனுஷ் படமாகவும் இது மாறியுள்ளது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம், முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் 51.42 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக ட்ரேட் அனலிஸ்ட் மனோபாலா விஜயபாலன் தெரிவித்துள்ளார்.

வெற்றிக் கொண்டாட்டம்

வெற்றிக் கொண்டாட்டம்

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தனுஷ் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர். இதில் நடிகர் தனுஷ், இயக்குனர் ஜவஹர் மித்ரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் படங்களில் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

ஹீரோயின்கள் இல்லை

ஹீரோயின்கள் இல்லை

கர்ணன் படத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் படக்குழுவினருக்கு பார்ட்டியும் கொடுத்துள்ளார் தனுஷ். அதில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆனால் தனுஷ் கொடுத்த இந்த சக்சஸ் பார்ட்டியில் படத்தின் ஹீரோயின்களான நித்யா மேனன், ராஷிகண்ணா,பிரியா பவானி ஷங்கர், என யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X