தந்தையர் தினம்..தனுஷ் வெளியிட்ட வித்தியாச வாழ்த்து வீடியோ

சென்னை : தந்தையர் தினத்தையொட்டி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து ஒரு சிறிய வீடியோவை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் தன்மை உடையவர். கோலிவுட்டில் அறிமுகமாகி ஹாலிவுட்வரை சென்றிருக்கும் தனுஷ் தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

நானே வருவேன்

நானே வருவேன்

தனுஷ் கடைசியாக நடித்த ஜகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்ததால் கோலிவுட்டில் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தில் இணைந்துள்ளதால், இப்படத்தின் இசை எவ்வாறு அமைந்துள்ளது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இரண்டு காதல்

இரண்டு காதல்

கதாநாயகனின் கல்லூரி நாட்கள் மற்றும் அவனது இளமைப் பருவம் என இப்படத்தின் கதையானது இரண்டு காலகட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷின் கதாபாத்திரத்தில் இரண்டு காதல்கள் உள்ளன, ஒன்று கல்லூரிப் பகுதிகளிலும் மற்றொன்று அவரது வாழ்க்கையின் பிற்பகுதியிலும் வருகின்ற மாதிரி கதையை வடிவைத்திருக்கிறார் இயக்குனர்.

பிளாக்பஸ்டர் கூட்டணி

நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக இப்படத்தில் இணைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே குட்டி, யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தங்கமகன் படத்துக்கு பின் சுமார் 7 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இந்த பிளாக்பஸ்டர் கூட்டணி இப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

தாத்தாவின் அலப்பறை

தாத்தாவின் அலப்பறை

இந்நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பாரதிராஜா, தனுஷூக்கு போன் செய்து இன்றைக்கு பாதர்ஸ் டே உன் அப்பாவுக்கு விஷ் பண்ணியானு கேட்டு அலப்பறை செய்கிறார். அந்த glimpse வீடியோ தனுஷ் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

தி கிரே மேன்

தி கிரே மேன்

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேன் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ம்தேதி வெளியாக உள்ளது. தனுஷுக்கு கடந்த சில படங்கள் சரியாக அமையாத நிலையில், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் படங்கள் அவருக்கு கம் பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X