நவம்பர் 14... காவியத்தலைவனுக்கு போட்டியாக களமிறங்கும் திருடன் போலீஸ்!
சென்னை: அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள திருடன் போலீஸ் படம் வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீசாகிறது.
தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் பணி புரிந்த கார்த்திக் ராஜூ என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் - ஐஸ்வர்யா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இப்படம் கார்த்திக் ராஜூவின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை எஸ்.பி.பி.சரணின் கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸ் தயாரித்துள்ளது.

எதிர்பார்ப்பு...
முன்னதாக சென்னை 28, ஆரண்யகாண்டம் போன்ற வெற்றிப் படங்களைத் தந்தது கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸ். அந்தவகையில், திருடன் போலீஸ் படமும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 வித கெட்டப்...
குக்கூ படத்தில் பார்வையற்றவராக நடித்து தன் திறமையை வெளிப்படுத்திய தினேஷ், இப்படத்தில் மூன்று வித தோற்றங்களில் வருகிறாராம்.

மற்ற கதாபாத்திரங்கள்...
தினேஷ் தவிர பால சரவணன், நிதின் சத்யா, ஜான் விஜய் மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

காவியத் தலைவன்...
வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா உள்ளிட்டோர் நடித்த காவியத்தலைவன் படமும் நவம்பர் 14 அன்றே ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











