த்ரிஷாவுக்கு இதெல்லாம் தேவையே இல்லை, ஆனாலும் செய்தார்: இயக்குநர்
சென்னை: த்ரிஷா போன்ற சீனியர் நடிகை இதை எல்லாம் செய்ய வேண்டிய தேவையே இல்லை என்று இயக்குநர் திருஞானம் தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவின் 60வது படம் பரமபதம் விளையாட்டு. திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.
த்ரிஷாவின் பிறந்தநாளான நாளை பரமபதம் விளையாட்டு பட ட்ரெய்லர் வெளியாக உள்ளது.
இந்நிலையில் திருஞானம் த்ரிஷாவை பாராட்டி பேட்டி கொடுத்துள்ளார்.

த்ரிஷா
நான் நடித்துள்ள முதல் அரசியல் த்ரில்லர் படம் பரமபதம் விளையாட்டு என்கிறார் த்ரிஷா. படத்தில் தாயாக நடிக்கும் அவர் ஒரு டாக்டர் ஆவார். ஒரு நாள் இரவில் காட்டில் நடக்கும் சம்பவங்களை தான் படமாக எடுத்துள்ளனர்.

ஒரு நாள் இரவு
96 படத்தில் ஒரு நாள் இரவில் நடக்கும் காட்சிகள் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் பரமபதம் விளையாட்டு படத்திலும் த்ரிஷாவுக்கு ஒரு நாள் இரவு ராசி ஒர்க்அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்காடு
ஏற்காட்டில் உள்ள காடுகள் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். த்ரிஷா இந்த படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார். அவர் படப்பிடிப்புக்கு 2 மணிநேரம் முன்கூட்டியே வந்துவிடுவார். தனது ஷாட்களை நடித்துப் பார்ப்பார். த்ரிஷா போன்று அனுபவம் உள்ள நடிகை இதை எல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் அவர் செய்தார் என்கிறார் இயக்குநர்.

பரமபதம் விளையாட்டு
படம் நன்றாக வர வேண்டும் என்று த்ரிஷா பார்த்து பார்த்து நடித்துள்ளார். அனைத்து காட்சிகளும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று விரும்பி நடித்துள்ளார். இது ஒரு த்ரில்லர் படம் என்று திருஞானம் தெரிவித்துள்ளார். படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











