ரம்ஜான் ரேஸில் ஜிகர்தண்டா, சலீம், திருமணம் எனும் நிக்காஹ்
திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படம் ரம்ஜானை ஒட்டி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்.
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் அனீஸ் இயக்கத்தில், ஜெய்-நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் திருமணம் எனும் நிக்காஹ்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளால் இப்பட ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படம் ரம்ஜான் விருந்தாக திரைக்கு வருவதாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

யாரையும் காயப்படுத்தவில்லை
திருமணம் எனும் நிக்காஹ் எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுதவோ எடுக்கப்பட்ட படமல்ல.

புரிதலை உணர்த்தும் படம்
ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம் தான் திருமணம் எனும் நிக்காஹ்.

பிரச்சினைகள் முடிந்துவிட்டது
திருமணம் எனும் நிக்காஹ் மதங்கள் இடையே கூட கலாசாரம் வாயிலாக புரிதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் படமாகும். இந்த படத்தை சூழ்ந்து இருந்த பிரச்சனைகள் முடிந்து விட்டது.

ரம்ஜான் பண்டிகை காலத்தில்
இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு காலம் முடிந்த பின்னர் படத்தை கண்டு ரசிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகை அன்றோ அதற்கு பிறகோ திருமணம் எனும் நிக்காஹ் வெளியாகும் என்று கூறினார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

ஜிகர்தண்டா
இந்தப்படமும் நீண்ட நாள் இழுபறிக்குப் பின்னர் ஜூலை 25ல் ரிலீஸ் ஆக உள்ளது. 'பீட்சா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படம் 'ஜிகர்தண்டா'. இதில் சித்தார்த், லட்சுமி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தணிக்கையால் சர்ச்சை
'ஜிகர்தண்டா' படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. அதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் யு சான்றிதழ் பெற சில காட்சிகளை நீக்குமாறு கூற, அதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மறுத்துவிட்டார்.

தாமதமான ரிலீஸ்
இதனால் படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு சில சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போது படம் யு/ஏ சான்றிதழுடன் ஜூலை 25ல் வெளியாகிறது.

மதுரை கதைக்களம்
சிம்ஹா இதில் வில்லனாக நடித்திருக்கிறார். கருணாகரன், வினோதினி, பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.மதுரையை மையமாகக் கொண்ட கதை என்பதாலும், 'பீட்சா'வின் வெற்றியாலும் இப்படம் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பில் சலீம்
விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த "நான்" படம் பெரிய ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்திய படம் "சலீம்" வருகிற ரமலான் பண்டிகையையொட்டி ரிலீசாகிறது.

இரண்டு ஹீரோயின்கள்
இயக்குநர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய நிர்மல்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அக்ஷா பார்தசானி மற்றும் அஸ்மிதா இருவரும் நடித்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி தயாரிப்பு
இந்தப்படத்தை ஸ்டுடியோ 9 மற்றும் ஸ்ரீ ஸ்கிரீன் நிறுவனம் இரண்டும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து தயாரித்துள்ளன.


Click it and Unblock the Notifications











