For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  360 தியேட்டர்களை சுட்டெரிக்க வருகிறார் 'சோலார் ஸ்டார்' ராஜகுமாரன்....!

  By Mayura Akilan
  |

  அந்த ஸ்டார், இந்த ஸ்டார், நொந்த ஸ்டார் என்று எக்குத்தப்பாக எத்தனையோ பேர் தமிழ் சினிமாவைக் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் எழுதி, இயக்கி, நடித்து, கூடவே தயாரித்து, கஷ்டப்பட்டு சண்டை போட்டு, கலர் கலராய் சட்டை போட்டு நடித்து அசத்தியுள்ள திருமதி தமிழ் தமிழகம் முழுவதும் 360 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளதாம்.

  ராஜுவுக்கு புதுப் பட்டப் பெயரையும் சூட்டி மகிழ்ந்துள்ளது தேவயானி வட்டாரம். அதாவது இவருக்குப் பெயர் சோலார் ஸ்டாராம்.

  படம் வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்திற்கு 360 தியேட்டர் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் தேவயானி.

  நீ வருவாய் என...!

  நீ வருவாய் என...!

  ‘ நீ வருவாய் என' , ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்', ‘காதலுடன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரன் தயாரித்து, இயக்கி, நாயகனாக ‘திருமதி தமிழ்' படம் மூலம் அறிமுகம் ஆகிறார்.

  2வது ஜோடி கீர்த்தி

  2வது ஜோடி கீர்த்தி

  ராஜகுமாரனுடன் தேவயானி, கீர்த்தி சாவ்லா, ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கஞ்சா கருப்பு, ரோகினி, ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆஸ்தான இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

  ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன்

  ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன்

  படத்தின் நாயகன் ராஜகுமாரனுக்கு ‘சோலார் ஸ்டார்' என்று பட்டம் கொடுத்திருக்கிறார்களாம். அப்படிப் போட்டுத்தான் விளம்பரம் செய்கின்றனர். இந்தப் பட்டத்திற்காக ஒரு பரிசுப் போட்டியையும் கூட நடத்தியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

  ஆடிப்பூரத்தில் நீ... ராமநவமியில் திருமதி தமிழ்

  ஆடிப்பூரத்தில் நீ... ராமநவமியில் திருமதி தமிழ்

  திருமதி தமிழ் ரிலீஸ் ஆகும் நாள் ‘ராமநவமி' அதனால் சென்டிமென்ட் டச்சையும் சேர்த்து விட்டுள்ளார் தேவயானி. அதாவது "ஆடி பூரத்தில்....நீ வருவாய் என, ஸ்ரீ ராமநவமியில் "திருமதி தமிழ்".... என விளம்பரம் செய்கின்றனர்.

  அவருக்கு இது 75.. இவருக்கு மொத படம்

  அவருக்கு இது 75.. இவருக்கு மொத படம்

  இது வரை 74 படங்களில் நடித்துள்ள தேவயானி, தனது கணவர் ஜோடியாக 75 வது படத்தில் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

  தட்டிட்டாங்கப்பா, தட்டிட்டாங்க

  தட்டிட்டாங்கப்பா, தட்டிட்டாங்க

  படம் தீயாக இருக்கிறது. டிரைலர் பார்த்தே தியேட்டரில் கைத்தட்டினார்கள் என்று கூறி வருகின்றனர் ராஜ குமாரன், தேவயானி.

  வரி விலக்கு கிடைக்கும்

  வரி விலக்கு கிடைக்கும்

  திருமதி தமிழ் படத்திற்கு யூ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதால், வரி விலக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறி சந்தோஷப்படுகிறார் தேவயானி.

  ரசிகர்களுக்கு 'வலி விலக்கு' கிடைக்குமா...!

  ரசிகர்களுக்கு 'வலி விலக்கு' கிடைக்குமா...!

  படத்திற்கு வரி விலக்கு கிடைப்பது இருக்கட்டும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தலைவலி, உடல் வலி, மன வலி ஆகியவற்றிலிருந்து விலக்கு கிடைக்குமா என்பது குறித்து தேவயானி ஒன்றும் சொல்லவில்லை.

  360 தியேட்டர்ல ஓட்றோம்யா...!

  360 தியேட்டர்ல ஓட்றோம்யா...!

  தமிழகம் முழுவதும் எங்கள் சொந்த பேனரான ராதே பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக 360க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது என்றும் மகிழ்ச்சியில் பூரிக்கிறார் தேவா.

  முதல்ல எத்தனை தியேட்டர்ல படம் போடுறோம் என்பது முக்கியமல்ல...கடைசியில எத்தனை தியேட்டர்ல அது ஓடுதுங்கறதுதான் முக்கியம்... (நன்றி சிம்புதம்பி...)!!!

  English summary
  Devayani’s husband and the director of Nee Varuvai Enna, Vinnukum mannukum “Rajakumaran” is back with Thirumathi Tamizh. The film has been completed long before and now the team officially announced the release date as April 19. Thirumathi Tamizh has Rajakumaran as solo hero along with him Devayani,Ramesh kanna and Keeerthi Chawala are also playing key roles.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more